புத்திர தோஷம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB புத்திர தோஷம் !  ✾ ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர ஸ்தானம் என்பது 5-ம் வீட்டை வைத்து தீர்மானிக்க வேண்டும். புத்திரகாரகனாக செயல்படுகிறார். 5-க்கு 5-ம் இடம் என்று கூறப்படும் 9-ம் இடம், 9-க்கு 5-ம் இடம் என்று கூறப்படும் 1-ம் இடம் இதையெல்லாம் வைத்து கணக்கிட்டு புத்திர ஸ்தானத்தின் யோகப் பலனை நிர்ணயம் செய்ய வேண்டும். புத்திர தோஷம் உள்ள ஜாதகங்கள் ! ✾ 1,5,9 போன்ற இடங்களில் சனி, செவ்வாய், ராகு கேது போன்ற பாவிகள் அமையப் பெறுவது நற்பலன் என்று கூற முடியாது. இதனால் புத்திர தோஷம் ஏற்படுகிறது. ✾ 1,5,9 போன்ற இடங்களில் மேலே உள்ள குறிப்பிட்ட பாவிகள் அமையப்பெற்று அவர்களுடைய திசை நடைபெற்றால் புத்திர வழியில் சஞ்சலமும் கெட்ட பலனும் உண்டாகிறது. புத்திரனால் சொத்து இழப்பு : ✾ புத்திர ஸ்தானதிபதி 5,8,12 போன்ற இடங்களில் அமையப் பெற்றிருந்தாலும் அசுபர் பார்வை பெற்றாலும் அவருடைய பிள்ளைகள் கெட்டபுத்தி உள்ளவர்களாகவும், திருடர்களாகவும் இருப்பர். ✾ அதுபோல 5-ம் வீட்டிற்கு அதிபதி பலவீனம் அடைந்து விரயாதிபதி என்று சொல்லப்படும் 12-ம் வீட்டிற்கு அதிபதியோடு கூடினாலும் புத்திரனால் பணவிரயம், சொத்து இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும். ✾ புத்திரஸ்தானதிபதி பாவகிரகத்தின் நவாம்சம் அடைந்தாலும் புத்திரனால் பொருள் இழப்பு உண்டாகும். எச்சரிக்கையாக செயல்பட வேண்டும். புத்திர வழியில் சந்தோஷம் யாருக்கு? ✾ புத்திரஸ்தானதிபதி புத்திரஸ்தானத்தில் அமையப்பெற்று 9-ம் வீட்டிற்கு அதிபதி 9-ல் வீற்றிருந்தால் புத்திர வழியில் சந்தோஷம் ஏற்படும். அவரோடு புத்திரகாரகனாகிய குருவும் இணைந்து காணப்பட்டால் புத்திர வழியில் சந்தோஷமும் பு+ரிப்பும் ஏற்படும். புத்திர வழியில் கெடுதி யாருக்கு? ✾ புத்திர ஸ்தானத்தில் 6-ம் வீட்டிற்கு அதிபதி அமையப்பெற்றாலும் புத்திர ஸ்தானதிபதி பகைவர்களோடு கூடி பலம் குன்றியிருந்தாலும், புத்திர வழியில் சஞ்சலம், பொருள் இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படுகிறது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment