12 சர்ப்ப தோஷங்கள்!

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp ராகு - கேதுவால் ஏற்படும் 12 சர்ப்ப தோஷங்கள் ! அனைத்து கிரகங்களும் ராகு - கேதுவுக்கு இடையில் அமைந்து, ஜாதகத்தில் பாதி கட்டங்கள் காலியாக இருந்தால், அது பு+ரண கால சர்ப்ப தோஷமாகும். ஏதேனும் ஒரு கிரகம் வெளியே அமைந்தாலும் அது கால சர்ப்ப தோஷம் ஆகாது. லக்னம், ஏழாம் வீடு தவிர மற்ற வீடுகளில் அமரும் ராகு - கேதுக்களைப் பொறுத்து சர்ப்ப தோஷம் பல வகைப்படும். அனந்த கால சர்ப்ப தோஷம் : ராகு முதல் வீட்டிலும், கேது ஏழாம் வீட்டிலும் இருக்க, மற்ற கிரகங்கள் இவர்களுக்கிடையே அமைவதே அனந்த காலசர்ப்ப தோஷம். இதை விபரீத கால சர்ப்ப தோஷம் எனவும் கூறலாம். இவர்கள் பல இடையு+று, கஷ்டங்களுக்குப் பிறகு, தங்கள் சொந்த முயற்சியால் வாழ்க்கையில் முன்னுக்கு வருவர். எனினும் திருமணக் காலத்தில் சில இடையு+றுகள் உண்டாகும். சங்கசு+ட சர்ப்ப தோஷம் : ராகு 9-ஆம் வீட்டிலும், கேது 3-ஆம் வீட்டிலும் இருக்கும் ஜாதக அமைப்புடையோர் பொய் கூறுவர். முன்கோபியும்கூட, வாழ்க்கை ஏற்றத் தாழ்வு நிறைந்ததாக இருக்கும். கடக சர்ப்ப தோஷம் : ராகு 10-ல் இருக்க, கேது 4-ல் இருந்தால் சட்ட சிக்கல்கள் வரும். அரசாங்கத் தண்டனை உண்டு. 10-ல் இருக்கும் ராகு இருட்டு சம்பந்தமான தொழிலைக் கொடுப்பர். புகைப்படம், எக்ஸ்ரே போன்ற தொழில் கிடைக்கும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியதிபதி கெட்டால், சட்டத்திற்கு புறம்பான வேலைகளைச் செய்யத் தூண்டுவார். குளிகை சர்ப்ப தோஷம் : ராகு 2-ஆம் வீட்டிலும் கேது 8-ம் வீட்டிலும் இருந்தால் உடல் நலம் கெடும். இழப்புகள், விபத்துகள் நேரும். பொருளாதாரப் பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். ராகுவுக்கு இடம் கொடுத்த ராசியதிபதி பலம் பெற்றிருந்தால் வெளிநாட்டுப் பயணம் கிடைக்கும். வாசுகி சர்ப்ப தோஷம் : ராகு 3-ம் வீட்டிலும் கேது 9-ம் வீட்டிலும் இருந்தால் இந்த தோஷம் ஏற்படும். தொழிலில் பிரச்சனை ஏற்படும். காது மற்றும் இளைய சகோதரர்களால் பிரச்சனைகள் உருவாகும். சங்கல்ப சர்ப்ப தோஷம் : ராகு 4-ல், கேது 10-ல் இருந்தால் ஜாதகரின் வேலை, தொழில் கெடும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவைப்படும். பத்ம சர்ப்ப தோஷம் : ராகு 5-ம் வீடு, கேது 11-ஆம் வீட்டில் இருந்தால் குழந்தைகள் பிறப்பதில் பிரச்சனை ஏற்படும். இதனுடன் சந்திரன் கெட்டால் ஆவித் தொல்லை ஏற்படும். மேலும் நண்பர்களால் ஏமாற்றமும், நோய் உண்டானால் குணமடைய தாமதம் ஆகும். மகா பத்ம சர்ப்ப தோஷம் : ராகு 6-ல், கேது 12-ல் இருந்தால் நோயினால் தொல்லை உண்டாகும். எதிர்காலம் இடையு+றுகள் நிறைந்ததாக இருக்கும். 6-ம் அதிபதியை பொறுத்து நோய் குணமாகுதலும், எதிரிகளை வெற்றி கொள்ளுதலும் நடக்கும். தக்ஷக சர்ப்ப தோஷம் : கேது லக்னத்தில், ராகு 7-ல் இருந்தால் முன்யோசனையும் யு+கம் செய்யும் ஆற்றலும் உடையவர். தன் செல்வத்தை மது, மாதில் இழப்பார். திருமண வாழ்வில் தொல்லை ஏற்படும். கார்கோடக சர்ப்ப தோஷம் : ராகு 8-ல், கேது 2-ல் இருந்தால் கார்கோடக சர்ப்ப தோஷத்தை உண்டாக்கும். தந்தையின் சொத்து கிடைக்காது. எதிரிகள் அதிகமாக இருப்பர். விஷ்தார சர்ப்ப தோஷம் : ராகு 11-ல் கேது 5-ல் இருந்தால் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளை உண்டாக்கும். அடிக்கடி பயணம் செய்வார். வாழ்க்கையின் பிற்பகுதி நன்றாக இருக்கும். சேஷநாக சர்ப்ப தோஷம் : ராகு 12-ல், கேது 6-ல் இருந்தால் உடல் நலத்தில் பிரச்சனைகள் ஏற்படும். வழக்குகளில் சிக்கல் உண்டாகும். எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment