புரலியால் வந்த வினை !

ஒரு நாட்டில் அரசன் இருந்தான் அவன் கொஞ்சம் புத்தி சரியில்லாதவன் பிறர் துன்பப்படுவதைப் பார்த்து ரசிப்பான் அப்படிப்பட்ட ராஜாவின் பிறந்த நாள் அன்று மன்னருக்கு பிடித்த கனியை கொடுத்தால் மன்னர் மகிழ்ந்து பரிசு கொடுப்பார் என்று புரலியை ஒருவன் கிழப்பிவிட்டுவிட்டான்.
அவ்வளவுதான் மக்கள் பரிசுகாக அவர்களிடம் இருக்கும் கனியை கொண்டுவந்து வரிசையில் நின்றார்கள்
மன்னர் பார்த்தார் ஏன்? மக்கள் வரிசையில் நிற்கின்றார்கள் என்றான்
மந்திரி நாட்டில் ஏற்ப்பட்ட புரலியை கூறினார் .
அப்படியா !
சரி வர சொல்லுங்கள் என்றார்
ஒருவன் வந்தான் எழும்பிச்சைபழம் மன்னனிடம் தந்தான் மன்னர் வாங்கி பார்த்து விட்டு ஏன்டா நான் என்ன? எலும்பிசை பார்க்காதவனா என்று கோபம் கொண்டு இதை அவன் வாயில் தினியுங்கள் என்றார்.
காவலாளிகள் வந்து எலும்பிச்சை பழத்தை கொண்டுவந்தவன் வாயில் தினித்தார்கள் கதறிய படி ஓடினான் !
மன்னர் மகிழ்ச்சியில் சிரித்தார்
அடுத்தவன் வந்தான் அவன் கொய்யா பழம் கொண்டு வந்தான்
அவனுக்கும் அதே தண்டணை தந்தார் அவன் வாய் கழியும் நிலையில் கதறிக்கொண்டு ஓடினான் இவ்வாறு நடப்பது தெரியாமல்
பரிசு ஆசையால் மக்கள் வரிசையில் வந்து கொண்டு இருந்தனர் .
ஒருவன் அன்னாசி பழம் கொண்டுவந்தான் அவனைப்பார்த்து நான் என்ன அன்னாசி பழம் பார்க்காதவனா இதை அவன் வாயிலேயே தினித்து அனுப்புங்கள் என்று உத்தரவுப் போட்டார்
காவலாலிகள் அவன் வாயில் தினித்தார்கள் வாய் கிழிந்து இரத்தம் ஒழிகியது இருந்தும் அவன் சிரித்தான்
மன்னருக்கு புரியவில்லை வியப்பாகவும் இருந்தது அவனிடம் மன்னர் கேட்டார் ஏன்டா வாய்கிழிந்து இரத்தம் வருது சிரிக்கின்றாய் என்றார்
அதற்கு அவன்
மன்னா நானாவது பரவாயில்லை அன்னாசி பழம் தான் வைத்திருந்தேன் எனக்கு பின்னே நின்றவன் பழாபழம் வைத்திருந்தான் அவன் நிலை நினைத்தேன் சிரிப்பு வருகிறது என்றான்

No comments:

Post a Comment