நாய் குறுக்கே செல்றால் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp பயணத்தின்போது நாய் குறுக்கே செல்வது நல்ல சகுனமா? நாய்களால் ஏற்படும் சகுனங்கள் !  🌟 நாம் பயணம் தொடங்கும்போது நாய் எதிரே வருவதும், வலமிருந்து இடமாகப் போவதும் நல்லது. அதுவே நம்மீது தாவி ஏறுவதும், நம் கால்களை மிதிப்பதும் கூடாது. 🌟 குறுக்கே சென்று நம் பயணத்தை தடுப்பது போல் செய்தால் வழியில் திருடரால் தொல்லை ஏற்படும். 🌟 கயிற்றை வாயில் கவ்வி வந்தால் சிறைவாசம் ஏற்படப்போவதையும், முச்சந்தியில் நின்று ஊழையிட்டு அழும் நாய் அந்த வீதியில் மரணம் ஒன்று ஏற்படப்போகிறது என்பதையும் காட்டும். 🌟 நாய் ஒரு எரியும் நெருப்புக்கட்டையை வாயில் கவ்வி எதிரில் வருவது சுபம். நாய் ஒரு விட்டின் சுவரை காலால் கீறிக் கொண்டிருக்க அவ்வீட்டிற்கு திருடர் பயம் ஏற்படும். 🌟 பயணத்தின்போது நமக்கு முன்னால் நாய் ஓடுவது நன்மையான பயணம் ஆகும். எவ்வளவு விரட்டினாலும் நம்மை நோக்கி பெரிதாக குரைத்துக் கொண்டிருந்தால் பயணத்தில் ஏதேனும் பெரும் தீமை ஏற்படும் என்பதால் பயணத்தை நிறுத்திவிடுவது நல்லது. 🌟 காய்ந்த எலும்புத்துண்டை வாயில் வைத்துக் கொண்டு ஒருவரை நாய் நெருங்க அவருக்கு மரண ஆபத்து என்றும் அவ்வாறே ஒரு வீட்டில் நாய் நுழைந்தால் அவ்வீட்டில் மரணம் ஏற்படும் என்றும் கூறலாம். 🌟 நாய் தனித்தோ அல்லது பல நாய்கள் ஒன்று கூடியோ அல்லது நடுவில் கூடி நின்று சு+ரியனைப் பார்த்துக் குரைத்தால் அந்த நாட்டை ஆள்பவர் மாறி புதிதாக வேறு ஒரு ஆள்பவர் வருவார். 🌟 புல், வைக்கோல், மாடி இவற்றில் இருந்து மழைக்காலங்களில் ஊளையிட்டால் அதிக மழை பொழியும் என்றும், மற்ற காலங்களில் ஊழையிடுமானால் இடர்கள் நேரிடும். ஊரின் நடுவே குரைத்துவிட்டு பின் சுடுகாடு நோக்கி குரைத்துக் கொண்டே ஓடும் நாய், அந்த ஊரின் முக்கியமான மனிதருக்கு இறப்பு ஏற்படப்போவதை குறிக்கும். மரங்களின் அருகே சென்று குரைக்கும் நாய் மழை வரப்போவதை காட்டும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment