ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
ஆடி மாத ராசிபலன் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/uUOYQE
ஆடி மாத ராசிபலன்கள்
மேஷ ராசி :
அரசு சம்பந்தப்பட்ட அனைத்து காரியங்களும் சிறப்பாக இருக்கும். வாகனங்களை கையாளுவதில் கவனத்துடன் இருக்கவும். உடன் பிறந்தோர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கல்வி மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். குல தெய்வ வழிபாடு மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டை புதுப்பிக்கவும், உல்லாச பயணம் செல்லும் எண்ணம் மேலோங்கும். உடல் உழைப்பும், பணவரவும் அதிகரிக்கும். தேவையற்ற மனக்குழப்பத்தை தவிர்க்கவும். புத்தி தடுமாற்றத்தை தவிர்க்கவும். காரியங்கள் சிறப்படையும், தொழில் லாபம் அதிகரிக்கும்.
ரிஷப ராசி :
அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வுடன் பணியிடமாற்றம், நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும் மற்றும் வீடு கட்டும் யோகம் உண்டாகும். கல்வியில் ஆர்வம், பணக் கஷ்டம் நீங்கும். வீட்டை புதுப்பிக்கும் நிலை உண்டாகும் விவசாயம் சிறப்படையும். ரியல் எஸ்டேட் தொழிலில் முன்னேற்றம் மற்றும் உடன் பிறப்புகளுடன் நல்லுறவு உண்டாகும். உடல் உழைப்பு அதிகரிக்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். எல்லா செயல்களும் வெற்றியடையும்.
மிதுன ராசி :
வருமானம் அதிகரிக்கும், தந்தையின் உதவி கிடைக்கும். பங்குச்சந்தை முதலீடுகள் பண வரவை அதிகரிக்கும் தகவல் தொடர்பு சிறப்படையும். கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியூருக்கு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. சகோதரர்களால் பண வரவு அதிகரிக்க செய்வதுடன் புதிதாக வீடு வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். ராகுவால் இடமாறுதலுக்கான சந்தர்ப்பங்கள் உருவாகலாம். நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை, சகோதரர்களுடன் பிரச்சனைகள் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் சிறப்படையும். தொழில் உத்தியோகம் மேன்மையடையும். பூர்வீக வீடு கிடைக்கும், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
கடக ராசி :
சூரியனால் அதிகாரம் தூள் பறக்கும், தலைமை பதவி வகிப்பீர்கள், சமயோசிதமாக செயல்படுவீர்கள் வாக்குவன்மை அதிகரிக்கும். பண வரவும், இடமாற்றமும் உண்டாகும். பெண்களால் யோகம் உண்டாகும் ஆடம்பரப்பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும். உல்லாசப் பயணம், அண்டை மற்றும் உறவினர்களின் வீட்டு விஷேசங்களில் கலந்துகொள்வீர்கள். பரம்பரை நிலத்தில் பங்கு கிடைக்கும் புத்தி கூர்மை அதிகரிக்கும். சண்டை சச்சரவுகள் வரலாம். வாகனங்களை கையாளும்பொழுது கவனம் தேவை மனதில் மந்த நிலை உண்டாகும்.
சிம்ம ராசி :
ராசிநாதன் சூரியன் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார். செலவுகள் அதிகரிக்கும் வீண் அலைச்சல் உண்டாகும். முதலீடுகள், புத்தி கூர்மை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம், வங்கி சேமிப்பு மிக சிறப்பாக இருக்கும். மேலும் மனக் குழப்பமும் சோம்பலும் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாகன யோகம், தொழில் மேன்மை அடைவீர்கள். கேதுவால் வாடிக்கையாளர்களின் உதவி மற்றும் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். பெண்களினால் செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவி அன்யோன்யம் அதிகரிக்கும்.
கன்னி ராசி :
நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் வெற்றியடையும், எண்ணிய எண்ணங்கள் யாவும் நிறைவேறும், வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. முதலீடுகளை தவிர்க்கவும். சகோதரர்களின் உதவிகளை கிடைக்க செய்வார். தான தர்மங்கள் மற்றும் குழந்தைகளுக்காக அதிக செலவுகள் செய்ய நேரிடும். வியாபாரம் மற்றும் துணையின் உதவிகளை கிடைக்க செய்வார். தகவல் பரிமாற்றம் சிறப்படையும், ஆரோக்கியம் மற்றும் மன தைரியம் அதிகரிக்கும், தேவையற்ற செலவுகளையும் வீண் அலைச்சலையும் தவிர்க்கவும்.
துலாம் ராசி :
எதிர்ப்புகளை கண்டு அஞ்சமாட்டீர்கள். கௌரவப் பதவிகள் தேடி வரும். பு+ர்வீக சொத்துப் பிரச்னைக்கு தீர்வு கிட்டும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களிடமிருந்த பய உணர்வு, தடுமாற்றம் எல்லாம் நீங்கும். குடும்ப வருமானம் உயரும். மூத்த சகோதரருடன் இருந்த கருத்துமோதல்கள் விலகும். விலையுயர்ந்த நகை வாங்குவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அவ்வப்போது மறதி ஏற்படும். காதல் இனிக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த முட்டுக் கட்டைகள், தடைகள் நீங்கும். உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மறைமுக எதிர்ப்புகளும் வந்து நீங்கும். அக்கம்பக்கம் உள்ளவர்களுடன் வாய் சண்டை, வரப்புச் சண்டையெல்லாம் வேண்டாம். புதிய முயற்சிகளில் வெற்றி காணும் மாதமிது.
விருச்சிகம் ராசி :
தந்தையின் உதவி கிடைக்கும் சிவாலய வழிபாடு உயர்வைத் தரும். கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளவும் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்கவும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு உண்டாகும். செல்வச்சேர்க்கை அதிகரிக்கும். தொழிலில் மேன்மை நிலை உண்டாகும். மேலும் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் குலதெய்வ அருள் கிடைக்கும், உடல் உழைப்பு அதிகரிக்கும் இடமாற்றம் உண்டாகும், எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் மற்றும் வாகன யோகம் உண்டாகும்.
தனுசு ராசி :
அரசு அதிகாரிகளின் விஷயத்தில் கவனம் தேவை, தந்தையிடம் சச்சரவைத் தவிர்க்கவும். சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும் இயந்திரங்களின் வகையில் முதலீடுகள் செய்வீர்கள். கடன் வாங்குதல் மற்றும் கொடுப்பதை தவிர்க்கவும். உயர்கல்வி நிலை சிறப்படையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். பெண்களால் துன்பம் அதிகரிக்கும். வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். தொழில் முதலீடுகள் அதிகரிக்கும். நீண்ட தூரம் பயணம் செல்லும் நிலை உண்டாகும். பக்கத்து வீட்டுக்காரர்களால் நன்மை உண்டாகும்.
மகரம் ராசி :
உத்தியோகம் சம்பந்தமாக வெளியு+ர் பயணம் செல்வீர்கள், அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்தத் தொழில் சிறப்படையும், பதவி உயர்வு உண்டாகும். ரியல் எஸ்டேட் தொழில் லாபத்தைத் தரும். தாய் மாமன் உதவி கிடைக்கும் வியாபாரம் விருத்தியாகும். பணம் கொடுக்கல் வாங்கலிலும் வரவு செலவுகளிலும் மிகவும் கவனமாக இருக்கவும். பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். கணவன் மனைவி அன்யோன்யம் சிறப்படையும். லாபம் அதிகரிக்கும். நினைப்பதெல்லாம் எளிதில் நிறைவேறும். மனதில் குழப்பமும் பாரமும் அதிகரிக்கும். குடும்ப சந்தோஷமும் பண வரவும் அதிகரிக்கும்.
கும்பம் ராசி :
உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அதிகாரப் பதவி கிடைக்கும் செயல்களில் வேகம் அதிகரிக்கும். ஷேர்மார்க்கெட் முதலீடுகளைத் தவிர்க்கவும். படிப்பில் கவனம் தேவை. பண வரவு அதிகரிக்கும், அனைவரின் உதவியும் கிடைக்கும். வாழ்க்கைத்துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும், வாகனங்களை பராமரிக்கும் நிலை உண்டாகும். எல்லா காரியங்களும் வெற்றியடையும், தொழில் மற்றும் உத்தியோகம் சிறப்படையும். நண்பர்களுடனும் உறவினர்களுடனும் நல்லுறவு உண்டாகும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், ஞான மார்க்கத்தில் மனம் ஈடுபாடு கொள்ளும்.
மீனம் ராசி :
போட்டிகளில் வெற்றி உண்டாகும். பரம்பரை சொத்தில் பங்கு கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும் நிலை உண்டாகும். திருமுருகன் திருக்கோயில் வழிபாடு சிறப்பைத் தரும். தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும், மேல்நிலை கல்வி நிலை சிறப்படையும். மன தைரியம் அதிகரிக்கும் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உல்லாசப் பயணம் செல்வீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிநாட்டுக்கு செல்லும் யோகம் உண்டாகும், பிதுரார்ஜித சொத்திலிருந்து பண வரவு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்படையும், மன தைரியம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் திருக்கோயிலுக்கு பயணம் ஏற்படும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/uUOYQE
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment