ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
திருமண தடைக்கு காரணம்
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
திருமண தடங்கலுக்கான காரணம் !

🌠 எந்த ஒரு ஆணும் பெண்ணும் பருவ வயதில் திருமணம் செய்து கொண்டு, பிள்ளைகளை பெற்று மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் சிலருக்கு திருமண விஷயத்தில் பல நேரங்களில் தடைகள் உண்டாகின்றன.
🌠 ஜாதக ரீதியாக ஒருவருக்கு திருமண தடை, கால தாமத திருமணம் போன்றவற்றுக்கு, கிரகங்கள் அமர்ந்த நிலை, சேர்ந்த நிலை, பார்வையின் நிலை, தோஷங்கள், போன்ற பல காரணங்கள் உண்டு. ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்றும் நாகதோஷத்தால் மட்டும் திருமணம் தாமதம் ஆவதில்லை.
🌠 7ஆம் இடத்தில் சனி இருந்தால், 7ஆம் இடத்தை சனி பார்த்தால், லக்னத்தில் சனி இருந்தால், 7க்குடையவனுடன் சனி இருந்தால், 7க்குடையவனை சனி பார்த்தால், சுக்கிரனுடன் சனி இருந்தால் திருமணம் தாமதம் ஆகும் நிலை ஏற்படும்.
❇ மேலும், கீழ்கண்ட கிரகநிலைகள் ஜாதகத்தில் அமைந்தால் திருமணம் ஏற்படுவதிலும், ஸ்த்ரி சுகம் ஏற்படுவதிலும் பெரும்பாலும் தடங்கல் ஏற்படும்.
1. சப்தமாதிபதி சுபசம்பந்தமின்றி நீசம் அல்லது அஸ்தங்கதனாகி 6,8,12-ல் இருந்தால் ஜாதகருக்கு திருமண தடை ஏற்படும்.
2. 7ம் அதிபதி 12ல் இருந்து, லக்னாதிபதி அல்லது ஜன்ம ராசியாதிபதி 7ல் இருந்தாலோ விவாகம் இல்லை.
3. சுக்கிரன் சனி சேர்ந்திருப்பது அதற்கு 7ல் சனி செவ்வாய் சேர்ந்திருந்தால் திருமணம் நடக்காது.
4. சுக்கிரன் செவ்வாய் 7ல் இணைந்தால் திருமணம் ஏற்படுவது கடினம், ஆனால் ஜாதகர் ஸ்த்ரிலோகனாக இருத்தல் கூடும்.
5. சுக்கிரன், செவ்வாய் இணைந்து 5 அல்லது 9ல் இருந்தால் விவாகத்தில் தடங்கல் ஏற்படும்.
6. சுக்கிரனுடன் பாபக்கோள் யாராவது இணைந்து 7,5,9 ல் இணைந்தால் திருமணம் நடப்பது கடினம்.
7. சுக்கிரன், சனி, புதன் இவர்கள் மூவரும் நீச நவாம்சங்களில் இருந்தால் மனைவி மக்களின்றி தனியாய் இருப்பார்.
8. 7,12ம் பாவங்களில் இரண்டு இரண்டு பாபக்கோள்கள் இருந்து, 5ல் சந்திரன் இருந்தால் ஜாதகருக்கு திருமணம் நடக்காது.
9. 7ம் பாவத்தைச் சனி பார்த்தாலும் திருமணத் தாமதம் உண்டாகும்.
10. கடக லக்னத்தில் 7ல் குரு நீசம் பெற்றாலும் திருமண தாமதம் ஏற்படும்.
11. சு+ரியன், புதன் இவர்கள் லக்னத்திலிருந்து குரு 12ல் இருந்தாலும் திருமணம் தாமதம் ஆகும்.
12. பெண் ஜாதகத்தில் 7ம் அதிபதியுடன் சனி சேர்ந்தால் திருமணத்தில் தாமதம் உண்டாகும்.
🌠 வீட்டிற்கு வடக்கு திசையில் தேவையற்ற பொருட்கள் சேர்த்து வைக்கப்பட்டிருந்தாலும் அல்லது வீட்டின் மொட்டை மாடியில் தேவையற்ற பொருட்கள் இருந்தாலும், திருமண தடை உண்டாகும். வீட்டின் வடக்கு பக்க சுவரில் விரிசல் இருந்தால், திருமண தடை உண்டாகும்.
🌠 மேலும், ஒருவருக்கு திருமணம் தாமதம் ஆக உண்மையான காரணம் என்ன என்பதை சரியாக தெரிந்துகொண்டு, அதற்கு உண்டான பரிகாரங்களை செய்யும் பொழுது ஜாதகருக்கு திருமணம் விரைவாக சரியான நேரத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment