ஆணவம் கொள்ளாதே !

ஒரு ஊரில் பலசாலி ஒருவன் இருந்தான்
அவனை அந்த ஊரில் வெல்ல யாரும் இல்லை என்பதால் அவன் பிறரை மதிக்காமல் ஆணவம் கொண்டு திரிந்து வந்தான்.
ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு முனிவர் வந்தார்.
மக்கள் சென்று அவரிடம் ஆசி பெற்றனர்
முனிவர் வந்ததை அறிந்த பலசாலி அவரிடம் சென்று.
நான் தான் இந்த ஊரிலேயே பெரிய பலசாலி உங்களை இந்த ஊர் மக்கள் வணங்கினால் என்ன ? என்னை நீங்கள் வணங்கவேண்டும். அப்படி இல்லை என்றால் என்னுடன் சண்டை புரிந்து என்னை வெல்லவேண்டும் இதில் நீங்கள் எதை செய்கின்றீர்கள் என்றான் !
அதற்கு முனிவர் சிரித்தப்படியே சொன்னார் உன்னிடம் நான் சண்டைக்கு வருகின்றேன். ஆனால் எனக்கு பயிர்ச்சி செய்ய மூன்று தினங்கள் ஆகும் பரவாயில்லையா ? என்றார்
அந்த பலசாலியும் ஆணவத்துடன் மூன்றுநாள் என்ன மூப்பதுநாள் கூட எடுத்துக் கொள்ளுங்கள் என்னை வெல்ல உன்னால் முடியாது ! என்று கூறி  மூன்றுநாள் கழித்து வருவதாக சொல்லிவிட்டு சென்றான் .
அன்று இரவு முழுவதும் ஒரே வயிற்று போக்கு நிக்காமல் சென்றுக்கொண்டு இருந்தது .
அது தொடர்ந்து மூன்று நாள் நிற்காமல் போய்கொண்டு இருந்தது.
பலசாலியை காண மூன்றாம் நாள் முனிவர் அவன் வீட்டிற்கு வந்தார்.
எழுந்து நிற்க கூட முடியாமல் பலசாலி வீட்டில் முடங்கிப்போய் கிடந்தான்.
முனிவர் என்னுடன் சண்டைக்கு வருகின்றாயா ? என்றார்
அதற்கு பலசாலியால் பதில் கூட கூறமுடியாமல் கை செய்கையால் என்னால் சண்டைசெய்யமுடியாது என்றான்.
முனிவர் என்னப்பா இந்த ஊரில் நீதான் பெரிய பலசாலி என்றாய் இப்போது சண்டை செய்ய வரமாட்டேன் என்கிறாய்? என்றார்
இப்போது புரிந்ததா உன் பலம் என்பது நிறந்திரம்ஆனது அல்ல .
ஆணவத்தால் அதை நீ உணர மறந்தாய் கவலை வேண்டாம் அனைத்தும் சரியாகிவிடும்.
இனியாவது ஆணவம் இன்றி வாழ்க என்று ஆசி வழங்கினார் .
தன்தவறை உணர்ந்த பலசாலி முனிவரிடம் மன்னிப்பு கேட்டான்

நன்றி

No comments:

Post a Comment