கணவன் மனைவி அமையும் இடம் பக்கமா ? தூரமா ?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கணவன்ஃமனைவி அமையும் இடம் பக்கமா, தூரமா?   திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர். 🌷 வெற்றிகரமான திருமணம் என்பது சரியான துணையைக் கண்டுபிடிப்பது மட்டுமல்ல - சரியான துணையாக இருப்பதும் கூடத்தான். இவ்வாறு நமக்கு அமையும் துணை எவ்வளவு தூரத்தில் இருந்து வரும் என்பது நமக்கு தெரிவதில்லை. 🌷 பலரும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை மாப்பிள்ளையோஃபெண்ணையோ தேடி கொண்டிருக்கிறார்கள். ஆனால் கடைசியில் அவருக்கு பக்கத்து வீட்டிலேயே வரன் அமைந்து விடும். 🌷 அப்படி உங்களுக்கு அமையும் வரன் பக்கத்திலா? அல்லது தூரத்திலா? என்பதை அறிவது எப்படி? 🌷 ஒரு ஜாதகருக்கு வரப்போகும் மனைவி அல்லது கணவனின் பிறந்த வீடு ஜாதகர் பிறந்த இடத்திலிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கும் என்பதை ஜாதகரின் குருவுக்கும், சுக்கிரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை வைத்து கண்டறியலாம். 🌷 அதே போல ஜாதகிக்கு சுக்கிரனுக்கும், செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தை வைத்து கண்டறியலாம். ஆண் ஜாதகம் : ஆண் ஜாதகத்தில் ஜாதகரைக் குறிக்கும் குருவுக்கும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும் இடைப்பட்ட தூரத்தை கொண்டு மனைவி அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம். 1. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 1-2-3-11-12 ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும். 2. ஆண் ஜாதகத்தில் குரு நின்ற ராசிக்கு 5-7-9 ல் சுக்கிரன் நின்றால் மனைவியின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும். பெண் ஜாதகம் : இதே போல் பெண் ஜாதகத்தில் ஜாதகியைக் குறிக்கும் சுக்கிரனுக்கும், ஜாதகியின் கணவனைக் குறிக்கும் செவ்வாய்க்கும் இடைப்பட்ட தூரத்தைக்கொண்டு கணவன் அமையும் இடம் பக்கமா? அல்லது தூரமா? என்பதை அறியலாம். 1. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 1-2-3-11-12 ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் பக்கத்தில் அமைந்திருக்கும். 2. பெண் ஜாதகத்தில் சுக்கிரன் நின்ற ராசிக்கு 5-7-9 ல் செவ்வாய் நின்றால் கணவனின் இருப்பிடம் தூரத்தில் அமைந்திருக்கும். 🌷 7ஆம் அதிபதி என்ன நட்சத்திரத்தில் இருக்கிறார்..? அந்த நட்சத்திர அதிபதி எங்கு இருக்கிறார் என்பதையும் கவனிக்க வேண்டும். 4ஆம் பாவம் இதில் சம்பந்தப்பட்டால் அம்மா ஊரில் அல்லது அம்மா வழி தூரத்து உறவில் அமையும். 9ஆம் பாவத்திலோ சு+ரியனுடனோ சம்பந்தப்பட்டால் தந்தை வழி தூரத்து உறவில் அமையும். 🌷 5ஆம் அதிபதி பாக்யாதிபதி ஏழாம் அதிபதி மூவரும் சம்பந்தமானால் காதல் திருமணம் என எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை பு+ர்வீக ஊரிலும் கணவனோ மனைவியோ அமைந்து விடும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment