இராகு கேது பயர்ச்சி பலன்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp 2017-ல் இராகு கேது பெயர்ச்சியால் எந்த இராசிக்காரர்களுக்கு சிறப்பு ?  🌺 கடந்த வருடம் இராகு கேது பெயர்ச்சியானது 8.1.2016 அன்று நிகழ்ந்தது. இந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு இராசிக்காரர்களும் நிறைய சந்தோஷங்களையும், பல்வேறு பிரச்சனைகளையும் சந்தித்திருப்பார்கள். அதே போல இந்த வருடம் 27.7.2017 அன்று இராகு கேது மீண்டும் பெயர்ச்சி அடைகிறது. 🌺 ஹேவிளம்பி வருடமான 2017 ஆம் ஆண்டு ஆடி 11-ம் தேதி (ஜூலை 27) வியாழக்கிழமை அன்று சுக்ல சதுர்த்தியும், உத்திர நட்சத்திரம், சித்த யோகம் கொண்ட நாளில் துலா லக்னத்தில் ராகு பகவான் சிம்ம இராசியிலிருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியிலிருந்து மகர ராசிக்கும் இடம் பெயர்கின்றது. 🌺 நவக்கிரகங்களில் ராகுவும், கேதுவும் பாம்புக் கிரகங்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தக் கிரகங்கள் பின்னோக்கிச் சென்று பெரும்பலனை நமக்கு அள்ளித் தந்தால் தான் நாம் முன்னோக்கிச் செல்ல முடியும். 🌺 ஒருவருடைய ஜாதகத்தில் ராகு பலம் பெற்று அமைந்தால் அவர்களுக்கு ராகு பலன்களை கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பார், அவர்கள் நல்ல பொருளாதார நிலையை அடைவார்கள். அதே போல் ஒருவர் ஜாதகத்தில் கேது பலம் பெற்று அமைந்தால் நல்ல அறிவாற்றல் கிடைக்கும். 🌺 ஒருவர் ஜாதகத்தில் லக்னம் அல்லது சந்திரனுக்கு 2,4,7,8,12 ஆகிய இடங்களில் இராகு கேது இருந்தால் திருமணத் தடை, புத்திர பாக்கிய தடை, குடும்ப ஒற்றுமை குறைவு போன்றவை ஏற்படும். 🌺 இந்த இராகு கேது பெயர்ச்சியினால் ஒவ்வொரு இராசிக்காரர்களுக்கும் பல விதமான பலன்கள் இருக்கும். இந்த பெயர்ச்சியால் எந்த இராசிக்காரர்கள் பலன் அடைகிறார்கள் என்று பார்ப்போம். பெயர்ச்சியால் நன்மை அடையும் இராசிகள் : 🌺 இந்த இராகு கேது பெயர்ச்சியில் சிம்மம், கன்னி, விருச்சகம், கும்பம் போன்ற இராசிகளுக்கு நன்மை அதிகம் கிடைக்கும். 🌺 இந்த இராசிக்காரர்கள் அனைவருக்கும் பண மழையிலும், பாராட்டு மழையிலும் நனைவார்கள். நினைத்த காரியங்கள் எளிதில் கைகூடும். நல்ல தொழில் அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். வாழ்க்கைக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொள்வார்கள். வழிபாட்டால் பலன்கள் காண வேண்டிய இராசிக்காரர்கள் : 🌺 மேஷம், கடகம், தனுசு, மகரம் போன்ற இராசிக்காரர்கள் பரிகாரத்தின் மூலம் பலன் அடையலாம். 🌺 மற்ற இராசிக்காரர்கள் ராகு கேதுவின் பாதசார பலம் அறிந்து நாள், நட்சத்திரம், திதி, கரணம், யோகம் போன்றவை பார்த்து நல்ல பலன்களை தரும் தெய்வ சன்னதிகளுக்கு சென்று வழிபட்டு வந்தால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். நாள் பார்த்து வழிபாட்டால் கோள்கள் கூட நற்பலன்களைத் தர வாய்ப்புகள் உள்ளது. வழிபாட்டு தலங்கள் : 🌺 திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், திருவாலங்காடு, திருச்செங்கோடு போன்ற தலங்களில் இராகு கேது பெயர்ச்சியன்று முறையாக வழிபட்டு வாழ்க்கையில் வளம் காணுங்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment