நட்சத்திரம் அதற்கு ஏற்ற குணம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB நட்சத்திரங்களும் குணாதிசயங்களும் !  ஒருவருடைய ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது. ஜோதிட சாஸ்திரத்தில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. அஸ்வினி - அமைதியாக இருந்தாலும், தங்கள் காரியத்தில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். பரணி - தாய் தந்தையருக்கு நல்ல பிள்ளையாக இருப்பார்கள். நல்ல மனம் படைத்தவர்கள். கார்த்திகை - சாதுர்யமாக பேசி காரியத்தை நடத்தி விடுவார்கள்;. தைரியசாலிகள். ரோகினி - பிறருக்கு உதவி செய்வதில் வல்லவர்கள். அறிவாளிகள். செய்யும் காரியத்தை திருத்தமாக செய்வார்கள். மிருகசீரிடம் - எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார்கள். ஞானம் சார்ந்த கருத்துக்களை அறிந்தவர்கள். திருவாதிரை - சு+ழ்நிலைக்கு தகுந்த மாதிரி தங்களை மாற்றிக் கொள்ளும் மனப்பக்குவம் உள்ளவர்கள். புனர்பு+சம் - கர்வமில்லாதவர்கள். கேள்வி ஞானம் அதிகம் உள்ளவர்கள். பு+சம் - பகைவருக்கு பயப்படமாட்டார்கள். வசீகரமான தோற்றம் உடையவர்கள். ஆயில்யம் - நல்லவர்களாக இருக்கும் இவர்களிடம் முரட்டுத்தனமும், முன்கோபமும், எடுத்தெரிந்து பேசும் குணமும் இருக்கும். மகம் - எந்த செயலில் ஈடுபட்டாலும் அதை திறம்படவும், விருப்பமுடனும் செய்து முடிப்பார்கள். பு+ரம் - படிப்பில் ஆர்வம் உடையவர்கள். தனித்திறமை மிக்கவர்கள். உத்திரம் - செய்யும் காரியங்கள் அனைத்திலும், உண்மையாகவும், ஈடுபாட்டோடும் செய்வார்கள். ஹஸ்தம் - அமைதியானவர்கள். எப்படிப்பட்ட குணாதிசயம் பெற்றவர்களையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். சித்திரை - மிகுந்த அறிவாளிகள். அமைதியை விரும்புகிறவர்கள். சுவாதி - எது நல்லது, எது கெட்டது என ஆராய்ந்து செயல்படுவார்கள். உற்றார் உறவினர்கள் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டவர்கள். விசாகம் - உயர்ந்த அறிவுத் திறன் கொண்டவர்கள். தீவிர தெய்வ பக்தி கொண்டவர்கள். உண்மையாக இருப்பார்கள். அனுஷம் - புகழை விரும்புபவர்கள். கடின உழைப்பாளிகள். கேட்டை - பக்தி உடையவர்கள். வசீகரமான தோற்றம் உள்ளவர்கள். எதையும் வெளிப்படையாக பேசிவிடும் குணம் உள்ளவர்கள். மூலம் - அதிகம் அன்பு, பண்பு, பணிவு, இரக்கம், கருணை நிறைந்தவர்கள். பு+ராடம் - எதையும் நுணுக்கமாக ஆராயும் தன்மை உள்ளவர்கள். தாங்கள் ஈடுபடும் காரியம் எதுவாக இருந்தாலும் முடிவு இப்படித்தான் என்ற முடிவுக்கு வருவார்கள். உத்திராடம் - உண்மையானவர்கள். எதையும் மூடி மறைத்து செய்யும் குணம் இல்லாதவர்கள். திருவோணம் - எப்போதும் உற்சாகமாக இருப்பவர்கள். அவிட்டம் - எடுத்துக் கொள்ளும் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் திறமைசாலி. சதயம் - உண்மை, சத்தியம் தவறாதவர்கள். பூரட்டாதி - இவர்கள் அதிகாரத்திற்கு அடிப்பணியமாட்டார்கள். அன்பு மற்றும் இரக்க சுபாவம் கொண்டவர்கள். கல்வியில் சிறந்து விளங்குவார்கள். உத்திரட்டாதி - பிறருக்கு துன்பத்தை தராத குணம் உள்ளவர்கள். ரேவதி - நேர்மையாக வாழ்பவர்கள், பேச்சில் இனிமை, கொடுக்கல் வாங்கலில் நாணயம் உள்ளவர்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment