ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
நல்லநண்பனை அடையாளம் காண !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
நல்ல நண்பனை அடையாளம் காண்பது எப்படி?
யார் நல்ல நண்பன்?
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நண்பர்கள் உண்டு. நண்பன் என்பவன் உதவும் குணமுடையவனாகவும், உறுதுணையாகவும், விழும்போது தோள் கொடுப்பவனாகவும் இருப்பான். ஆனால் நண்பர்களுக்குள் கர்வம் என்பது இருக்கக்கூடாது. இங்கு இரு நண்பர்கள் நட்பினை பற்றி எடுத்துக் கூறுகின்றனர்.
ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் வாழ்ந்து வந்தனர். இருவரும் எப்போதும் இணைபிரியாமல் இருந்தனர். ஒருவன் பாலு. மற்றொருவன் சோமு. இருவரில் சோமு பாலு மீது உண்மையான அன்பு கொண்டிருந்தான். எப்போதும் பொறுமையாகவும், பணிவுடனும் இருப்பான். ஆனால் பாலு தன் நட்புதான் உயர்ந்தது. தனக்குதான் நட்பைப் பற்றி அதிகமாகத் தெரியும் என்று பெருமையாகப் பேசிக் கொண்டிருப்பான். ஒரு முறை இருவரும் பக்கத்து ஊருக்கு ஒரு விழாவுக்குப் போக வேண்டி இருந்தது. அதிகாலையிலேயே இருவரும் புறப்பட்டனர். ஊருக்கு வெளியே ஒரு அடர்ந்த காடு இருந்தது. இருவரும் அந்தக் காட்டின் நடுவே இருந்த ஒத்தையடிப் பாதையில் நடக்கத் தொடங்கினர்.
திடீரென்று ஊஊ... என்று சோமு குரல் எழுப்பினான். அந்தக் குரலைக் கேட்டு திடுக்கிட்ட பாலு பட்டென்று சோமுவின் கன்னத்தில் ஒரு அறை கொடுத்தான். திடுக்கிட்ட சோமு சற்றும் கோபப்படாமல் பாலு, என்னை ஏன் அடித்தாய் என்று தெரிந்து கொள்ளலாமா? இப்படித் திடீரென்று கத்தினால் நான் பயந்து விட மாட்டேனா? இப்போது சொல் ஏன் அப்படிக் கத்தினாய்? இந்த பகுதியில் விலங்குகள் ஏதேனும் இருந்தால் விலகி ஓடட்டும் என்றுதான் குரல் எழுப்பினேன் என்று சொன்னவுடன் பாலு மௌனமாக நடந்தான். அப்போது வழியில் ஒரு ஆறு ஓடிக் கொண்டிருந்தது. அதில் இறங்கிய சோமு ஓடும் நீரில் தன்னைத் தனது நண்பன் அடித்து விட்டான் என்று எழுதினான். அதைப் பார்த்த பாலு ஒன்றும் புரியாமல் திகைத்தான். அவன் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தொடர்ந்து நடந்தான் சோமு.
நடுக்காட்டில் நடந்து கொண்டிருந்தனர் இருவரும், வழியில் ஒரு சேறு நிறைந்த குட்டை இருந்தது. அதன் கரை ஓரமாக நடந்து கொண்டிருந்த பாலு கால்வழுக்கிக் குட்டையில் விழுந்தான். அதைப் பார்த்த சோமு அவனைக் காப்பாற்ற தவித்தான். பாலு கொஞ்சம் கொஞ்சமாக சேற்றுள் அமிழ்ந்து கொண்டிருந்தான். வேகமாகத் தன் தலையில் கட்டியிருந்த தலைப் பாகையை அவிழ்த்து பாலுவிடம் வீசி அவனைப் பற்றிக் கொள்ளச் சொல்லி சேற்றிலிருந்து மீட்டான். அதற்காக பாலு ஆயிரம் முறை நன்றி சொன்னான். உடையைச் சுத்தம் செய்து கொண்டு தொடர்ந்து நடந்தனர். சற்றுத் தொலைவு சென்றவுடன் பாலு வழியில் தெரிந்த ஒரு பாறையில் சிறு கல்லால் தன் நண்பன் காப்பாற்றியதை எழுதினான் புன்னகையுடன் அதைப் பார்த்தான் சோமு. நான் சேற்றில் அமிழ்ந்து போகாமல் என்னைக் காத்தாய் நீயே என் உண்மையான நண்பன் என்று பாலு சோமுவிடம் கூறினான்.
நண்பன் தவறாகத் தீங்கு செய்யும் பொழுது அதை நீர்மேல் எழுதிய எழுத்துப் போல மறந்துவிட வேண்டும். ஆனால் அவன் செய்யும் நன்மையைக் கல்மேல் எழுதிய எழுத்துப் போல ஒருகாலும் மறக்காமல் இருக்கவேண்டும். அதற்காகத் தான் நீர்மேலும் கல்மேலும் அந்த செய்கைகளை எழுதினார்கள். இரண்டு நண்பர்களும் உண்மை அன்போடு சிரித்து மகிழ்ந்தனர். ஒரு உண்மையான நண்பனை பொறுத்துப் போவதுதான் உண்மையான நட்பு.
தத்துவம் :
முகம் மட்டும் மலரும்படி நட்பு செய்வது நட்பு அன்று, நெஞ்சமும் மலரும் படியாக உள்ளன்பு கொண்டு நட்பு செய்வதே நட்பு ஆகும்.
இந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment