சாதிக்க துடிப்பவர்களுக்கு !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இது சாதிக்க துடிப்பவர்களுக்காக மட்டும் ! விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் வெற்றிக்கு அடிப்படை !  ஒரு செயலில் இறங்கும் முன் அதில் வெற்றி பெற முனைப்புடன் இருக்க வேண்டும். மற்றவர்கள், உன்னால் இந்த செயலை செய்ய முடியாது என தாழ்த்தி பேசினாலும், உங்கள் நோக்கம் மாறக் கூடாது. நீங்கள் செய்யும் செயலில் விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் அந்த விண்மீனையும் எட்டிப் பிடித்து சாதிக்கலாம். இங்கு சாதிக்க விரும்பும் ஒரு சிறுவனை பற்றி பார்ப்போம். சிபி என்ற சிறுவன் சிறு வயதிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டு இருந்தான். இனிமேல் அவனால் நடக்க முடியாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். ஆனால், சிபியின் அம்மா அதை மனதளவில் ஏற்றுக்கொள்ளவில்லை. சிபியின் அம்மா, சிபிக்கு மிகத் தீவிரமாக நடைப்பயிற்சி அளித்தார். உன்னால் நடக்க முடியும் என்ற நம்பிக்கையை சிபியின் மனதில் விதைத்தார்கள். அம்மாவின் ஆதரவான பேச்சும், அவர்களது பயிற்சியும் சிபியின் மனதில் தன்னம்பிக்கையை ஏற்படுத்தியது. அதன் விளைவாக, அவன் மிகவும் சிரமப்பட்டு மெல்ல மெல்ல நடக்கத் தொடங்கினான். இதனிடையே சிபிக்கு ஒரு ஆசை ஏற்பட்டது. அதாவது உயரம் தாண்டும் விளையாட்டில் தான் ஒரு சாம்பியனாக ஆக வேண்டும் என்பது தான் அந்த ஆசை. அந்த ஆசையை அடைய எண்ணி அதற்கான முயற்சிகளில் இறங்கினான். ஏற்கனவே நடக்க முடியாத சிபி, உயரம் தாண்டுவதற்கான பயிற்சியை ஆரம்பித்தபோது பலரும் அவனைக் கேலி செய்தார்கள். உன்னால் இதைச் செய்யமுடியாது, உனக்கு ஏன் இந்த வீண் ஆசை என்று சொல்லி அவன் உற்சாகத்தைக் குலைத்தார்கள். ஆனாலும், சிபி அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தன் பயிற்சியைத் தொடர்ந்து செய்தான். ஆனால், இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் மெலிந்துபோன அவனது கால்கள் அவனுக்கு ஒத்துழைக்கவில்லை. பிறகு, அவன் தன் பலவீனமான கால்களை வலுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டான். காலங்கள் கடந்தன. இளைஞனான சிபி, உயரம் தாண்டுவதில் தான் மிகப் பெரிய வீரனாக வேண்டும் என்ற கனவைக் கைவிடவில்லை. தன் கால்களை வலுப்படுத்துவதற்கான பயிற்சியையும் தொடர்ந்து செய்து வந்தான். அப்போது அவன் சிந்தனையை தூண்டும் வகையில் சிபியின் தாத்தா சிபிக்கு ஒரு அறிவுரை கூறினார். சிபி நீ உன் கால்களை மட்டும் வலுப்படுத்தினால் போதாது. உன் மனதையும் வலுப்படுத்த வேண்டும் என்று அறிவுரை கூறினார். தாத்தா கூறிய வார்த்தைகள் சிபிக்கு ஊக்கத்தை தந்தன. பிறகு சிபி கடுமையான பயிற்சியை மேற்கொண்டான். இடைவிடாத பயிற்சியும் உறுதியான தன்னம்பிக்கையும் சிபியை உயரம் தாண்டுதலில் உலக சாம்பியனாக்கியது. அது மட்டுமல்ல, உயரம் தாண்டுதலில் புதிய உலக சாதனையையும் அவன் ஏற்படுத்தினான். தத்துவம் : நம்மால் முடியுமா என்று மனத்தளர்ச்சி அடையாமல், முடியும் என்ற நம்பிக்கையுடன் முயற்சி செய்தால் அதுவே பெரிய வலிமையாக அமையும். ழூ குறிப்பு : நித்ரா ஜோதிடரால் வழங்கப்பட்ட உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment