ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் !

🌟 புரட்டாசி மாதத்தில் பிறந்த குழந்தைகள் அறிவுடனும், திறமையுடனும் ஞான மிக்கவராக இருப்பார்கள்.
🌟 புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் திறமை உடையவர்கள். சிறுவயதிலேயே நு}ல்களைப் புரட்டிப் படிப்பர்.
🌟 புரட்டாசியில் பிறந்த இவர்கள் அதிர்ஷ்டசாலிகள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள்.
🌟 இவர்கள் அரிய வகை நு}ல்களைச் சேகரிப்பர். விரைவில் அரசு வேலை கிடைக்கும் வாய்ப்பு இவர்களுக்கு உண்டு.
🌟 இம்மாதத்தில் பிறந்தவர்கள் படிக்காத மேதைகளாகவும், படித்த பட்டதாரிகளாகவும். விஞ்ஞானிகளாகவும் விளங்குவர்.
🌟 தன் உழைப்பினாலும், திறமையினாலும் உயர்ந்த அந்தஸ்தை அடைவர். இவர்கள் நல்ல பேச்சாளர்களாக இருப்பர்.
🌟 இவர்கள் மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பர். காரியத்தை எளிதில் முடிக்கும் ஆற்றல் உடையவர்.
🌟 இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். தன் முயற்சியால் பல செயல்களை செய்து வெற்றி காண்பர்.
🌟 இவர்களிடம் கற்பனை சக்தியும், தத்துவங்களும் நிறைந்து காணப்படும்.
🌟 அரிய நு}ல்களைச் சேகரிப்பர்கள். இவர்கள் மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சமர்த்தியசாலிகள்.
🌟 ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடமாட்டார்கள். எதையும் திறம்படச் செய்யவேண்டுமென்ற கொள்கை உடையவர்கள்.
🌟 மற்றவர்கள் செய்யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தெரியும், அதை ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக எடுத்துக் கூறிடுவார்கள்.
🌟 மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகளை கூட ஏற்படாவண்ணம் நடந்துகொள்வர்கள். மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவார்கள்.
🌟 பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ காரியத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.
🌟 மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர்கள். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள். காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்தி வாய்ந்தவர்கள்.
🌟 நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற்குள் செய்வதைத் திருந்தச் செய்வார்கள்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment