ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
ஆனி மாதத்தில் பிறந்த வர்களது குணம் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணம் இப்படி தான் இருக்குமா?
ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் !

🌠 ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள். மிகுந்த பொறுமைசாலிகள். மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். சிந்திக்கும் ஆற்றல் அதிகம் கொண்டிருப்பர். வாழ்வில் முன்னேற துடிப்பவர்கள். மனைவி குழந்தைகள் மீது அதிகம் பாசமாக இருப்பார்கள். மற்றவர்களை மயக்கும் வகையில் பேசுவார்கள். ஞாபக சக்தி அதிகம் கொண்டவர்கள். அடிக்கடி தாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பர். சந்தேகப்படும் குணம் கொண்டவர்கள்.
🌠 இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் வெகு சீக்கிரமாகக் கிரகிக்கும் தன்மையுடையவர்கள். இவர்களிடம் நிரந்த கொள்கைகள் எதுவும் இருக்காது. உள்ளத்தில் இருப்பதை வெளிப்படுத்த மாட்டார்கள். வாழ்க்கையில் கஷ்டம் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள். கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். இவர்கள் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட நீண்டநாள் பழகியவர் போல் பழகும் குணம் கொண்டவர்கள்.
🌠 இவர்கள் சு+ழ்நிலைக்கேற்றவாறு கருத்தை மாற்றிக் கொள்வர். தம்மைப் பாதிக்காமலிருக்கும் காரியங்களிலும் அதிகப் பொறுப்பு ஏற்படாமலிருக்கும் துறைகளிலும் இவர்கள் தைரியமாக தோன்றிடுவர். இவர்கள் ஒரே கல்லில் இரண்டு கனிகளை அடையும் சாதுர்யமுடையவராக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.
🌠 இந்த மாதத்தில் பிறப்பிலேயே தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவர்கள், தான் தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்களே தவிர, சிறு சிறு தொழில்களை செய்வதற்கு தயங்குவார்கள். நிலையான எண்ணங்கள் கொண்டிருக்க மாட்டார்கள். பேச்சுத் திறமை நன்றாக இருக்கும். இவர்கள் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே மற்றொரு வேலையை செய்ய நினைப்பார்கள். அவ்வாறு இல்லாமல் ஒரு வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு செல்வது நல்லது.
🌠 இவர்கள் தொழில் நிமித்தமாகவோ, கல்வி பயிலும் காரணமாகவோ அல்லது வெளியு+ர் சென்று வேலைப் பார்க்கக்கூடிய சு+ழல் காரணமாகவோ, வீட்டில் உள்ளவர்களை பிரிய வேண்டி வந்தால், அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி அற்றவர்கள். இவர்கள் கட்டட வேலை, வண்டி இழுத்தல் போன்ற வேலைகளை செய்ய தயங்குவார்கள். இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள். இவர்களுக்கு மூளைதான் மூலைதனம். இந்த ஆற்றலைப் பயன்படுத்தி பல தொழில் துறைகளில் ஈடுபட்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.
நித்ரா நாட்காட்டியின் வாயிலாக வரும் அனைத்து தகவல்களும் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment