கூடா பழக்கம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp இந்த பழக்கங்களை வழக்கமாக கொண்டிருந்தால் விட்டுவிடுங்கள்! கட்டாயம் தவிர்க்க வேண்டிய பழக்கங்கள்!!  நாம் அன்றாடம் செய்யும் சில சாதாரண பழக்கவழக்கங்கள் கூட நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இப்பழக்கங்கள் நம் உடல்நலத்தில் சிறிது சிறிதாக பாதிப்பினை ஏற்படுத்தி நம்மை கொல்லும் விஷமாகிறது. ❁ நம்மில் பல பேரிடம் இருக்கும் கெட்டபழக்கம் நகம் கடித்தல் ஆகும். நாம் விரலில் உள்ள நகத்தினை கடிக்கும் போது அதில் உள்ள கிருமிகள் நமது உடலுக்குள் சென்று நோய் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ❁ நமது விரலில் ஏராளமான கிருமிகள் நிறைந்து இருக்கும். மூக்கு மற்றும் வாயில் நாம் விரலை வைப்பதால் நம் கையில் உள்ள கிருமிகள் உடலுக்குள் எளிதாக சென்று நோய் பாதிப்பினை ஏற்படுத்துகிறது. ❁ தரம் குறைவான கண்ணாடியினை பயன்படுத்தி சு+ரியனை பார்க்கும் போது அதிலிருந்து வரும் ஊதாக்கதிர்கள் நேரடியாக நமது கண்ணின் கருவிழியினை தாக்கி பார்வை குறைபாடுகளையும், சில சமயங்களில் புற்றுநோய் போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. ❁ கால்மேல் கால் போட்டு அமர்வதால் இரத்தநாளங்களில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் இதனால் உயர் மனஅழுத்தம், நரம்பு சிதைவு போன்ற பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ❁ உச்சி முதல் உள்ளங்கால் வரை போர்த்திக் கொண்டு தூங்கும் போது கார்பன்-டை-ஆக்சைடு அளவுக்கு அதிகமாக அதிகரித்து மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. ❁ தொடர்ந்து செல்போனில் ஹெட் போனை உபயோகிப்பதால் நோய்தொற்று ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாது, காது கேட்கும் திறனும் குறைகிறது. ❁ அதிக எடையுள்ள பைகளை நாம் எடுத்து செல்லும்போது நமக்கு தோல் வலி, முதுகு தண்டு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ❁ அதிக உயரமுள்ள செருப்புகளை அணியும் போது, குதிகாலில் எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. ❁ காலை உணவானது ஆரோக்கியத்திற்கு மிக முக்கியம். இதனை தவிர்க்கும் போது உடல் ஆற்றலை குறைத்து, உடல் எடையினை அதிகரிக்க செய்கிறது. இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment