புரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB புரட்டாசி மாத விரதமும் அதன் பலன்களும் !   புரட்டாசி என்றாலே திருமலை திருப்பதியும் அங்கு உறையும் திருவேங்கடவனும் நம் நினைவுக்கு வருவர். புரட்டாசி மாதம் புனித மாதமாக இருப்பதாலும் பெருமாளுக்கு உகந்த மாதமாக இருப்பதாலும் வைணவ கோவில்களில் சிறப்பு பு+ஜைகள் நடத்தப்படும். முன்னோர்களின் ஆசியை பெற்றுத் தரும் மிக அற்புதமான மாதம் ஆகும். 🌟 புரட்டாசி சனி என அழைக்கப்படும் புரட்டாசி சனிக்கிழமையில் சனிபகவானை நினைத்து சனி தோஷம் நீங்க கடைப்பிடிக்கப்படும் விரதம் ஆகும். இதேபோல் புரட்டாசியில் கடைப்பிடிக்க வேண்டிய சில விரதங்கள் : சித்தி விநாயக விரதம்: 🌟 புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தியில் விநாயகருக்காக இருக்கும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து, விநாயகரை வழிபட்டால் காரிய சித்தி உண்டாகும். சஷ்டி - லலிதா விரதம்: 🌟 புரட்டாசி மாத வளர்பிறை சஷ்டியில் பரமேஸ்வரியை நினைத்து கடைப்பிடிக்கப்படும் விரதம் இது. இந்நாளில் விரதம் இருந்து வழிபட்டால் பரமேஸ்வரி சர்வமங்கலங்களையும் அருள்வாள். அனந்த விரதம்: 🌟 புரட்டாசி மாத வளர்பிறை சதுர்த்தசி அன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம் இது. பக்தியுடன் இந்த விரதத்தை கடைபிடித்தால், தீராத வினைகள் எல்லாம் தீரும். ஐஸ்வரியங்கள் கிடைக்கும். அமுக்தாபரண விரதம்: 🌟 புரட்டாசி வளர்பிறை சப்தமியில், உமா - மகேஸ்வரின் அருள் கிடைக்க இருக்கும் விரதம் இது. இவ்விரத வழிபாட்டால் சந்ததி செழிக்கும். சௌபாக்கியங்கள் அனைத்தும் கிட்டும். ஜேஷ்டா விரதம்: 🌟 புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமியில் இருக்கும் விரதம் இது. இந்த விரத நாளில், அருகம்புல்லை கொண்டு சிவனையும் விநாயகரையும் வழிபட்டால் குடும்பம் செழிக்கும். மஹhலட்சுமி விரதம்: 🌟 புரட்டாசி மாத வளர்பிறை அஷ்டமி முதல் பதினாறு நாட்கள் லட்சுமிதேவியைப் பிரார்த்தித்து இருக்கும் விரதம் இது. ஓவ்வொரு நாளும் பக்தியோடு விரதம் இருந்து வழிபட்டு வந்தால் வறுமைகள் நீங்கும், வாழ்க்கை வளம் பெறும். கபிலா சஷ்டி விரதம்: 🌟 புரட்டாசி மாதத் தேய்பிறை சஷ்டியில், சு+ரியனை பு+ஜை செய்து, பழுப்பு வண்ணம் உடைய பசுமாட்டை ஆபரணங்களால் அலங்கரித்து பு+ஜிக்கும் விரதம் இது. இவ்விரதம் சித்திகளை தரும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment