அதிஷ்டமா? நம்பிக்கை யா?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB வாழ்க்கை வெற்றி பெற தேவை அதிர்ஷ்டமா? நம்பிக்கையா? வாழ்க்கை வெற்றி பெற தேவை அதிர்ஷ்டமா? நம்பிக்கையா? அதிர்ஷ்டம் இருந்தால் அனைத்தையும் வெல்லலாம் என சிலர் கூறுவர். ஒரு சிலர் அதிர்ஷ்டம் இருந்தால் போதுமா? அத்துடம் நம்பிக்கையும் விடாமுயற்சியும் தேவை. அப்பொழுது தான் அதிர்ஷ்டம் வரும் என்பர். வாழ்க்கையில் முன்னேற அதிர்ஷ்டம் முக்கியமா? நம்பிக்கை முக்கியமா? என்பதை இந்த சிறுகதை மூலம் தெரிந்துக் கொள்வோம். ராமு மிகவும் பரம ஏழை. தன்னுடைய குறைந்த வருமானத்தில் வாழ்க்கையை நடத்தி வந்தான். ஒரு நாள் ராமு வேலைக்கு செல்லும்போது தெருவில் பழங்கால காசு ஒன்றை கண்டெடுத்தான். துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம். அதிர்ஷ்டம் என்னைத் தேடி வந்துள்ளது. எப்படியும் நான் பணக்காரன் ஆகிவிடுவேன் என்று நம்பிக்கை கொண்டான். அந்த காசை தன் கோட்டு பையில் போட்டுக் கொண்டான். அன்றைய நாள் அவனுக்கு மற்ற நாட்களை காட்டிலும் அதிக லாபத்தை தந்தது. இதனால் அவன் அளவற்ற மகிழ்ச்சி அடைந்தான். இதற்கு காரணம் பழங்கால காசை கண்டெடுத்தது தான் என நினைத்தான். அன்று முதல் அவன் பழங்கால காசை தன் கோட்டுப் பையில் தொட்டு பார்ப்பான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில், அவனுக்கு பதவி, புகழ், பணம் வந்து சேர்ந்தன. ஒரு நாள் தன் மனைவியிடம், எனக்கு அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி! அந்த காசில் துளை இல்லை. என்ன ஆயிற்று? என்று குழப்பத்துடன் பார்த்தான். அப்பொழுது அவன் மனைவி, என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன் என்றாள். ராமு, இது எப்போது நடந்தது? என்று கேட்டான். அந்தக் காசு கிடைத்த மறுநாளே என்றாள். அதன் பின் அவன் அமைதியாக சிந்தித்தான். உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான். என நினைத்தான். தத்துவம் : ஒருவருக்கு அதிர்ஷ்டத்தை கொடுப்பது நம்பிக்கையும், விடாமுயற்சியும் தான். ராமு அந்த பழைய நாணயத்தின் மீது நம்பிக்கை வைத்ததால் விரைவில் புகழ், செல்வம் அடைந்தான். அதுபோல் ஒவ்வொரு வரும் தான் செய்யும் செயலின் மீது நம்பிக்கை வைத்தால் செய்யும் செயல் வெற்றிகரமாக முடியும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment