ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய தானங்கள்!
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
மகாளய அமாவாசையில் செய்ய வேண்டிய தானங்கள்

🍁 தானம் என்பது தனக்கே இல்லாத நிலை வரும் வரை தருவதாகும். அதுவும் மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. பித்ரு தர்ப்பணம் செய்தால் நமது முன்னோர்கள் சிறுவயதில் இறந்தவர்கள், பிறந்த உடன் இறந்த குழந்தைகள், துர்மரணம் ஆனவர்களுக்கு நல்ல கதி கிடைக்கும். இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்தால் நல்ல பலன்களை அடையலாம்.
🍁 கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததற்கு சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.
🍁 பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது. பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்திக்கீரையை உணவாக அளிக்கலாம். பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம். அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.
🍁 அனைவரும் ஒரேநாளில் அகத்திக்கீரை தருவதால் பசுவிற்கு சலிப்பு ஏற்பட்டு அகத்திக்கீரையை உண்ண மறுக்கிறது எனவே அகத்திக்கீரைக்கு பதிலாக கோதுமை தவிடு, அரிசி தவிடு, புண்ணாக்கு போன்றவையும் அமாவாசை அன்று தானம் செய்யலாம்.
🍁 தானம் செய்ய ஏற்ற எளிதாக சமைக்கும் வகையில் கத்தரி, அவரை, பீன்ஸ், வெண்டை, உருளை, கேரட், பீட்ரூட், முருங்கை, கோஸ், வாழைக்காய், முழுபு+சணி போன்றவற்றை தானம் தருதல் நன்று. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும்.
எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் :
🍁 அன்னம் - வறுமையும், கடன் தொல்லைகளும் நீங்கும்
🍁 தேன் - புத்திர பாக்கியம் உண்டாகும்
🍁 தீபம் - கண்பார்வை தௌpவடையும்
🍁 அரிசி - நமக்கு தெரிந்தும், தெரியாமலும் செய்த பாவங்களை போக்கும்
🍁 நெய் - நாட்பட்ட தீராத நோய்களை போக்கும்
🍁 பால் - துக்கம் நீங்கும்
🍁 பழங்கள் - புத்தியும், சித்தியும் உண்டாகும்
🍁 தேங்காய் - நினைத்த காரியம் வெற்றியாகும்
🍁 நெல்லிக்கனி - ஞானம் உண்டாகும்
🍁 பு+மி தானம் -
🍁 அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் என்பது நம் பிதுர்களையும் மகிழ்விக்கும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிடைக்கும். நமது குலம் தழைக்கும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment