ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
காதலை தீர்மானிக்கும் கிரகங்கள்
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
காதலை தீர்மானிக்கும் கிரகங்கள்..!

♥ கிரகங்களின் சேர்க்கை காதல் திருமணமா அல்லது பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணமா என்பதல்லாம் பிறக்கும் போது கிரகங்கள் நின்ற நிலையும், சேர்க்கையும், பார்வையையும் பொறுத்து அமையும்.
♥ சில கிரகங்களுடைய சேர்க்கையும், பார்வையும், இருப்பிடமும் இருந்தால் கண்டிப்பாக அந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ காதல் திருமணம் தான் நடக்கும். யார் தடுத்து நிறுத்தினாலும் அந்த திருமணம் நடக்கும்.
♥ ஆனால் காதல் திருமணத்திற்கு உரிய கிரகங்கள் சாதகமாக இல்லாத பட்சத்தில் காதல் திருமணம் நடந்தாலும் அந்த காதல் திருமணம் நீடித்து நிற்காது. ஒருவருடைய பிறந்த நேரத்தில் கிரகங்கள் இருந்த நிலை கொண்டு அவருடைய ஜாதகத்தை ஆராய்ந்து அவருக்கு எத்தகைய திருமணம் மகிழ்ச்சியை தரும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
♥ ஒருவருக்கு காதல் ஜெயிப்பதற்கு அவரது ஜாதகத்தின் 3,4,7 மற்றும் 12ம் வீடுகள் சிறப்பாக இருக்க வேண்டியது அவசியம். காதலுக்கு வீரம் அவசியம். ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து மூன்றாம் வீடு தைரிய, வீரிய ஸ்தானமாகும். இந்த இடத்தில் இருந்து ஒரு ஆணின் வீரத்தையும் வீரியத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.
♥ 3ம் வீட்டில் பாவ கிரகம், நீச்ச கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது. அதேபோல் இந்த வீட்டின் அதிபதி நீச்சம் அடையாமல், 6,8,12ல் மறையாமல் இருப்பது அவசியம். மூன்றாம் வீட்டை குரு பார்த்தால் ஆண்மகன் நல்ல சக்தியுடன் இருப்பான். மூன்றாம் வீட்டை சனி, புதன் பார்த்தால் காதல் சற்று சுணக்கமாக இருக்கும். மூன்றாம் வீட்டில் நீச்ச கிரகம் இருந்தாலும், பார்த்தாலும் காதல் மந்தமாகவே இருக்கும்.
♥ ஒருவரின் ஜாதகத்தில் 7-ம் இடம் மண வாழ்க்கையை, காதலை நிர்ணயிக்கும் இடம். இதை களத்திர ஸ்தானம் என்று சொல்வார்கள். இந்த இடம், இந்த இடத்தின் அதிபதி பலம் பெறுவதும், நீச்சம் அடையாமல் இருப்பதும் முக்கியம். இந்த இடத்தை வைத்துதான் ஒருவரது நடத்தை, ஆசை, விருப்பம், காதல் ஈடுபாடு போன்றவற்றை அறிய முடியும்.
♥ இந்த இடத்தில் பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள் அறவே இருக்க கூடாது. ஏழாம் வீட்டில் கிரகம் இருந்தால் அதன் தன்மை, வலிமைக்கு ஏற்ற ஜாதகங்களை கொண்டவர்களுக்கே இனிமையான காதல் அமையும்.
♥ ஏழாம் வீட்டிலோ, ஏழாம் அதிபதியுடனோ பாவ கிரகங்கள், நீச்ச கிரகங்கள், தீய கிரகங்கள், ராகு-கேது போன்ற நிழல் கிரகங்கள் சேர்ந்தாலும், பார்த்தாலும் காதல் தடம் மாறிப்போகும். காதலர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரவர் தனித்தனி பாதையில் போகும் நிலையும் ஏற்படலாம்.
♥ குரு, சுக்கிரன், செவ்வாய், புதன், சந்திரன் ஆகிய 5 கிரகங்கள் இருக்கும் இடங்கள், பார்வை ஆகியவையே ஒருவருக்கு காதல் வெற்றி ஆகுமா? அல்லது தோல்வியில் முடியுமா? என்பதை தீர்மானிக்கின்றன.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment