ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
மார்கழியில் பிறந்த வர்களின் குணம் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
மார்கழி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்!

🍀 மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல உள்ளம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுதந்திர வாழ்க்கை வாழவே அதிகம் விரும்புவார்கள். முன்கோபமும், பிடிவாத குணமும் கொண்டவராக இருப்பார்கள். ஆடம்பர பிரியர்கள். ஒரே இடத்தில் தங்கியிருப்பது இவர்களால் இயலாத காரியம். கடவுள் மீது அதிக பக்தி கொண்டவர்கள்.
🍀 பிறர் செய்யும் தவறுகளை பயமில்லாமல் துணிச்சலுடன் சுட்டி காட்டும் குணம் கொண்டவர்கள். இவர்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றி சிறிதும் யோசிக்கமாட்டார்கள். நண்பர்களுக்காக எதையும் செய்யும் குணம் கொண்டிருப்பார்கள்.
🍀 இம்மாதத்தில் பிறந்தவர்கள் நேர்மைக்கும், நியாயத்திற்கும் கட்டுப்பட்டு நடக்கக்கூடியவர்கள். தீயவர்களுடன் நட்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள். எதையும் கூர்ந்து கண்காணிப்பதில் வல்லவர்கள். அனைவருக்கும் தம்மால் முடிந்த நன்மைகளைச் செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள்.
🍀 இவர்கள் செய்யும் எந்த ஒரு விஷயத்திலும் தனித்தன்மை நிறைந்திருக்கும். ஆகையால் ஒரு தொழிலை இவரை நம்பி ஒப்படைத்தால் தொழில் விருத்தியடையும். இவர்கள் இளம் வயதிலேயே உலக அனுபவங்களைப் பெற்றிடுவார்கள். நல்ல நு}ல்களை தேர்ந்தெடுத்து படிப்பதில் ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
🍀 இம்மாதத்தில் பிறந்தவர்கள் சிறந்த எழுத்தாற்றல் பெற்றிருப்பார்கள். ஆகையால் இவர்கள் ஒரு சிறந்த எழுத்தாளராகவும் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இவர்கள் எழுதும் எழுத்துக்களுக்கு வலிமை அதிகமாக இருக்கும். இவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
🍀 இவர்கள் எந்த ஒரு செயலை செய்தாலும் அதை செய்து முடித்துவிட வேண்டும் என்ற குணம் கொண்டிருப்பார்கள். அதே சமயம் இவர்களுடைய வாழ்வில் ஏதேனும் பிரச்சனைகள் வந்துவிட்டால், அந்த பிரச்சனைகளை கண்டு துவண்டு விடுவார்கள்.
🍀 இம்மாதத்தில் பிறந்தவர்கள் பிறருக்கு அறிவுரை சொல்வதில் வல்லவர்கள். ஆனால் இவர்கள் வாழ்க்கையின் முற்பகுதியில் ஆடம்பர செலவுகள் செய்துவிட்டு, வாழ்க்கையின் பிற்பகுதியில் அதிகம் சிரமப்படுவார்கள். மார்கழி மாதத்தில் பிறந்தவர்கள் எதிர்காலத்தை எண்ணி ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment