எலுமிச்சையின் நன்மைகள் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp அடடே! எலுமிச்சை பழத்தில் இவ்வளவு நன்மைகள் இருக்கா! எலுமிச்சையில் இவ்வளவு நன்மை இருக்கா!   சிவபெருமானின் நேத்ரகனி என்று எலுமிச்சம் பழம் அழைக்கப்படுகிறது. இறை வழிப்பாட்டில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய அங்கம் வகிக்கிறது. திருஷ்டி தோஷ நிவர்த்தி செய்வதில் எலுமிச்சம் பழம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. 🌟 கோவிலில் நமக்கு கிடைக்கும் எலுமிச்சையானது இறைவனின் பிரசாதமாக கருதப்படுகிறது. அதிலும் குலதெய்வ கோவிலில் தரும் எலுமிச்சைக்கு சக்தி அதிகம். இதன் மூலம் உடலில் உள்ள நோய்கள் விலகி ஆரோக்கியம் மேம்படும். 🌟 நம் வீட்டில் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எலுமிச்சையை வைத்து பு+ஜை செய்வோம். மேலும் கோவில்களில் எலுமிச்சை பழம் கொண்டு விளக்கேற்றுவது நம் வழக்கம். அதுமட்டுமல்ல துர்கை, பத்ரகாளி, மாரியம்மன், நடராஜர், பைரவர் போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு கனிமாலை சாத்தும் போது கடவுள் சாந்தியடைகிறார். 🌟 இவ்வாறு பல நலங்களை கொண்ட எலுமிச்சை பழம் கடவுளுக்கு மட்டுமல்ல நமக்கும் பல்வேறு நன்மைகளை தரக்கூடியது. அந்த நன்மைகள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம். 🌟 எலுமிச்சை உலகெங்கும் நிறைந்து காணப்படும் பழமாகும். குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்திக்கு மிக அத்தியாவசியமான வைட்டமின் சி சத்து, எலுமிச்சையில் இருக்கின்றன. எலுமிச்சை பழம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவதோடு, துணிகள் மற்றும் பாத்திரங்களில் இருக்கும் கறைகளை நீக்கவும் பயன்படுகிறது. எலுமிச்சை பழத்தின் நன்மைகள் : 🍋 எலுமிச்சை உடல் எடை மற்றும் முகப்பருக்களை குறைப்பதற்கு மிகவும் சிறந்த பழம் ஆகும். 🍋 எலுமிச்சை ஜூஸை தினமும் டயட்டில் சேர்த்து வந்தால், உடல் எடை குறையும். ஏனெனில் இதில் உள்ள அமிலமானது, உடலில் உள்ள கொழுப்புகளை கரைத்து, உடலுக்கு ஒரு நல்ல வடிவத்தை கொடுக்கும். 🍋 செரிமானப் பிரச்சனை, வாயுப் பிரச்சனை போன்றவை உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றை சு+டான நீரில் கலந்து குடித்தால் நல்ல பயன் கிடைக்கும். 🍋 எலுமிச்சை இரத்த அழுத்தத்தை குறைக்கும் தன்மையுடையது. 🍋 எலுமிச்சை சருமம் மற்றும் கூந்தலுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக சருமத்தில் பருக்கள் இருப்பவர்கள் பயன்படுத்தினால், விரைவில் அதனை நீக்கலாம். மேலும் பொடுகுத் தொல்லை மற்றும் இதர கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளவர்கள் பயன்படுத்தினாலும், அந்த பிரச்சனைகளை தடுக்கலாம். 🍋 எலுமிச்சைப் பழச்சாறு உடலை குளிர்ச்சியாக்கும் தன்மை கொண்டது. இதன் மூலம் தோல் எரிச்சல், வெப்ப நோய்கள் தாக்குதல் போன்றவற்றிலிருந்து உடலுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. 🍋 காய்ச்சல், ஜலதோஷம் போன்ற நோய்களுக்கும் எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி நிவாரணம் தருகிறது. 🍋 வாந்தி, தலைசுற்றல், உயர் இரத்த அழுத்தம் காரணமாக வரும் தலைவலி, மயக்கம் போன்ற பல பிரச்சனைகளுக்கும் எலுமிச்சை மருந்தாக பயன்படுகிறது. 🍋 கேன்சர் நோயாளிகள், எலுமிச்சைச் சாற்றில் தேன் சேர்த்தோ, எலுமிச்சைச் சாறு கலந்த பச்சைத் தேநீரில் (புசநநn வுநய) தேன் சேர்த்தோ தங்களுக்குப் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளோடு கூடுதலாகச் சாப்பிடுவதால் நல்ல பயன் கிடைக்கும். இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment