ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
விரல்கள் சொல்லும் ரகசியம்
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
விரல்களின் அமைப்பில் இருந்து சில முக்கியமான குணங்கள் !

ஒருவருடைய விரல்களின் அமைப்பில் இருந்து சில முக்கியமான குணங்களை சொல்லிவிட முடியும். முதல் பார்வையிலேயே விரல்கள் நீளமா, குள்ளமா என்று சொல்லி விட முடியும். உள்ளங்கை அளவிற்கு இவை ஏற்ற மாதிரி இருப்பதே சிறப்பு ஆகும். உங்களுடைய விரலின் அமைப்பும்... உங்களுடைய குணமும்....!
நீளமான விரல்கள :
பொறுமையுள்ளவர்களாவும், சுத்தத்தை விரும்புகிறவர்களாவும் இருப்பார்கள். எந்த காரியத்தையும் சற்று மெதுவாகவே செய்வார்கள். யாரையும் சந்தேகிக்கக் கூடியவர்கள். சட்டென்று யாருடனும் பழகி விடமாட்டார்கள். தனிமையை விரும்புபவர்கள். இந்த மாதிரி விரல் அமைப்பு பெற்றவர்களின் கைகள் கட்டையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் இவர்கள் மிகவும் சுயநலக்காரர்களாகவும் மூட நம்பிக்கை உடையவர்களாகவும் இருப்பார்கள்.
வளையும் விரல்கள் :
விரல்கள் வளையக்கூடியதாக இருந்தால் அவர்கள் மென்மையான உள்ளம் கொண்டவர்கள். கலை, அழகை ரசிப்பவர்கள். கற்றுக் கொள்வதில் ஆர்வமும், பொறுமையும் உள்ளவர்கள். உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளாதவர்கள்.
விறைத்த விரல்கள் :
கட்டை போன்று விரைத்த விரல்களை உடையவர்கள் பிடிவாதமும், அழுத்தமும் உடையவர்கள். கடினமான உழைப்பாளிகள். தங்கள் மனதில் படிந்த எண்ணத்தை இவர்கள் எப்போதும் மாற்றி கொள்ளவே மாட்டார்கள். தங்கள் வேலையில் புதிய முறையை இவர்கள் ஒப்புக் கொள்ளமாட்டார்கள். புதிய சிந்தனைகள் இல்லாதவர்.
முடிச்சு விரல்கள் :
நீளமான விரல்கள் முற்றியவையாகவும், நடுப்பகுதியில் முடிச்சுகளுடனும் இருந்தால் இவர்கள் சண்டைக்காரர்களாகவும், பொய் பேசுகிறவர்களாகவும், வேஷம் போடுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
குட்டையான விரல்கள் :
குட்டையான விரல்களை உடையவர்கள் அவசரப்புத்திக்காரர்களாகவும், படபடப்பு மிகுந்தவர்களாகவும், நிதானமில்லாதவர்களாகவும், அனைவருடனும் சகஜமாகப் பழகுகிறவர்களாகவும், வேடிக்கையாக பேசுகிறவர்களாகவும் இருப்பார்கள்.
விரைத்த குட்டை விரல்கள் :
விரல்கள் கட்டையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் அதிகம் பிடிவாதம் உள்ளவர்களாகவும் அவசரப்பட்டு முடிவு எடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment