திருமண பொருத்தத்தில் முக்கியமான பொருத்தம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp திருமணப் பொருத்தத்தில் இருக்க வேண்டிய முக்கிய பொருத்தம்! யோனிப் பொருத்தம்..!!  ✴ திருமணத்தைப் பொருத்தவரை யோனிப் பொருத்தம் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பொதுவாக திருமணத்தின் முக்கிய குறிக்கோள் புதிய சந்ததியை (குழந்தைகள்) உருவாக்குவது. தாம்பத்திய சுகம், திருப்தி நிலை இவற்றை தீர்மானிப்பது யோனிப் பொருத்தம் ஆகும். ✴ யோனிப் பொருத்தம் என்பது ஆண், பெண் யோனி நிலையை மிருகங்களாக உருவகம் செய்துபொருத்தம் பார்க்கும் முறையாகும். நட்சத்திரங்கள் 14 மிருகங்களாக ஆண்-பெண் என பிரிக்கப்பட்டு உள்ளது. ஆணிற்கு ஆண் மிருகமும், பெண்ணிற்கு பெண் மிருகம் எனினும் உத்தமம். பெண்ணிற்கு ஆண் மிருகமும், ஆணிற்கு பெண் மிருகமும் என்றாலும் உத்தமம். பகை மிருகம் மட்டும் சேர்க்கக் கூடாது. ✴ சுக்கிரன் நீதி, சுக்கிரன் நாடி ஆகிய நு}ல்களில் தம்பதிகளுக்கு பொருத்தம் பார்க்கும் போது அதனை லக்னம், ராசி ஆகிய 2 கோணங்களில் பார்க்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. ஜோதிடத்தைப் பொறுத்தவரை லக்னம் என்பது உயிர், ராசி என்பது உடல். யோனிப் பொருத்தத்தைக் கணிக்கும் போது ராசியையும் கருத்தில் கொள்ள வேண்டும். ✴ உத்திராடம் நட்சத்திரம் மட்டும் கீரி எனவும், சில சாஸ்திர நு}ல்கள் மலட்டு பசு எனவும் சொல்கின்றன. ஒவ்வொரு மிருகத்திற்கும் பகை மிருகம் உண்டு. ஆண், பெண் பகை மிருகமெனில் மட்டுமே பொருத்தமில்லை எனலாம். மற்ற பொருத்தம் எத்தனை இருந்தாலும் இது முக்கியம். ✴ யோனிப் பொருத்தம் உடல் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால் ஜோதிடத்தில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு விலங்குகள் கூறப்பட்டுள்ளன. அந்த வகையில் தம்பதிகளுக்கு உரிய விலங்குகள் பகை இல்லாத வகையில் இருக்க வேண்டும். ✴ ஜோதிடர்கள் 27 நட்சத்திரங்களையும் சில மிருகங்களாகப் பிரித்திருக்கின்றார்கள். குதிரை, யானை, ஆடு, சர்ப்பம், நாய், பு+னை, பசு, எருமை, புலி, மான், குரங்கு, சிங்கம், கீரி என்று 13 மிருகங்களுக்கு 27 நட்சத்திரத்தை பிரித்திருக்கின்றார்கள். ✴ ஒவ்வொரு நட்சத்திர மிருகத்திற்கும் பகை - எதிரி மிருகம் - நட்சத்திரம் வைத்திருக்கின்றார்கள். ✴ அந்த வகையில் அஸ்வினிக்கும் சதயத்திற்கும் எருமை பகை. அஸ்வினி, சதயத்திற்கு - சுவாதியும் அஸ்தமும் பகை நட்சத்திரங்கள். எனவே பொருந்தாது. நட்சத்திற்கு உரிய மிருகம் : ✴ அஸ்வினி, சதயம் - குதிரை ✴ பரணி, ரேவதி - யானை ✴ கார்த்திகை, பு+சம் - ஆடு ✴ ரோகிணி, மிருகசீரிஷம் - பாம்பு ✴ திருவாதிரை, மூலம் - நாய் ✴ புனர்பு+சம், ஆயில்யம் - பு+னை ✴ மகம், பு+ரம் - எலி ✴ உத்திரம், உத்திரட்டாதி - பசு ✴ அஸ்தம், சுவாதி - எருமை ✴ சித்திரை, விசாகம் - புலி ✴ அனுஷம், கேட்டை - மான் ✴ பு+ராடம், திருவோணம் - குரங்கு ✴ அவிட்டம், பு+ரட்டாதி - சிங்கம் ✴ உத்திராடம் - கீரி பகை மிருகங்கள் : ✴ குதிரை - எருமை, யானை - சிங்கம், குரங்கு - ஆடு;, பாம்பு - கீரி;, மான் - நாய், எலி - பு+னை, மாடு - புலி; இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp

No comments:

Post a Comment