ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
சனியின் பார்வை !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
சனியின் பார்வை இவ்வளவு துன்பங்களை தருமா?
திருநள்ளாறு பற்றி அறிவோம்....!!
சனியால் பாதிக்கப்பட்ட நளன் :

🌿 சனியின் தோஷத்திற்கு ஆளான ஸ்ரீ நள சக்கரவர்த்தி, ஏழரை ஆண்டு சனி பிடித்து, எல்லா துன்பங்களையும் அனுபவித்தார். அந்த சமயத்தில் மனைவியையும், குழந்தைகளையும் விட்டுவிட்டு காட்டுக்குச் செல்லும் சமயம் கார்கோடகன் என்ற பாம்பு கடித்ததால் அவரின் சுய உருவத்தை இழந்தார்.
🌿 இறுதியாக அயோத்தி அரசனிடம் தேரோட்டியாக நளன் வேலை பார்த்தார். நளனின் மனைவியான தமயந்தி தன் கணவர் தோற்றம் மாறி வாழ்ந்து வருவதை ஒற்றர்கள் மூலம் அறிந்து மிகவும் வேதனை அடைந்தாள்.
🌿 நள சக்கரவர்த்தி அவருக்கு நேர்ந்த துன்பம் நீங்க திருநள்ளாறுக்கு அவர் குடும்பத்துடன் வந்து வழிபட்டார். கலிபுருஷனாகிய சனிபகவான் நளமன்னன் முன் தோன்றி, நீ என்னிடம் விரும்பும் வரத்தை கேட்டு பெற்றுக்கொள்வாயாக என்று கேட்க, நளன் உனது ஆட்சி நடக்கும் காலத்தில் என் வரலாற்றைக் கேட்டாரை நீ அடையாமல் இருப்பாயாக என்று வேண்டினான். இதனை நளவெண்பா, கலி நீங்கு காண்டத்தில்,
'உன் சரிதம் சொல்ல உலகாளும் காலத்தும்
மின் சொரியும் வேலாய்! மிக விரும்பி-என் சரிதம்
கேட்டாரைநீயடையேல் என்றாந்கிளர்மணிப்பு+ண்
வாட்டானை மன்னன் மதித்து"
🌿 என்று கூறுகிறது. எனவே சனிபகவானின் பிடியில் சிக்கியோர் அக்காலத்தில் நளமன்னனின் சரித்திரத்தை வாசிப்பது சிறந்த பரிகாரமாகும் என அக்காலம் முதல் நம் பெரியோர் சொல்லி வந்திருக்கின்றனர். இதில் உள்ள சு+ட்சுமம் என்னவெனில், இவனை விட நாம் கஷ்டப்படவில்லை என தைரியம் வரும் அளவுக்கு கஷ்டத்தை நளன் பட்டதுதான்.
🌿 சனிபகவான் காட்சி கொடுத்ததால் நளமகாராஜனின் எல்லா துன்பங்களும் நீங்கியது. நள சக்கரவர்த்திக்கு காட்சி கொடுத்த சனிபகவான் அவரிடம், நீ அரசர்களுள் சிறந்தவன். தோல்வியை அறியாதவன். உன்னிடம் ஏழரை ஆண்டுகள் வசித்து வந்தேன். உனது குடும்பத்தை யார் தரிசனம் செய்கின்றார்களோ, அவர்களை நான் காப்பேன் என்று சனீஸ்வர பகவான் அருள்பாலித்தார்.
🌿 பிறகு நளனிடம், நீ எனக்கு ஒரு தீர்த்தத்தை உருவாக்க வேண்டும். இந்த நள தீர்த்தத்தில் நல்லெண்ணெய் தேய்த்து நீராடி என்னை தரிசனம் செய்பவர்களுக்கு என்னால் வரும் துன்பங்கள் யாவும் நீக்கப்படும் என்று சனிபகவான் வரம் அருளினார். நளனும் நள தீர்த்தத்தை உருவாக்கி ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு பல திருவிழாக்களை நடத்தி இறைபணி செய்தார் என்பது வரலாறு.
ஈஈஈஇந்த தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் உடனே Pடயலளவழசந-ல் 5 நட்சத்திரக் குறியீடுகளை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
5 நட்சத்திரக் குறியீடுகள் வழங்க இங்கே கிளிக் செய்யுங்கள் !,,,
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment