ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
கொசுவை விரட்ட !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
கொசு தொல்லையா...?? அப்போ கண்டிப்பா இதையெல்லாம் ட்ரை பண்ணுங்க..!
கொசுக்களை விரட்ட வழிமுறைகள்!

தமிழ்நாட்டில் ஒவ்வொன்றுக்கும் ஒரு சீசன் இருக்கு, ஆனால் இந்த கொசுக்களுக்கு மட்டும் சீசனே கிடையாது. அதுவும் மழைக்காலத்தைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. கொசு கடித்தால் மலேரியா வந்துவிடுமோ, டெங்கு வந்துவிடுமோ என்று கொசுவர்த்தியை வைத்துவிட்டுத் தூங்குபவர்களுக்கு இன்னும் இதுக்கூட தெரியவில்லை அது கொசுவை கொல்லும் கொல்லைக்காரன் அல்ல. நம்மை கொல்லும் கொல்லைக்காரன் என்று. இதோ இதிலிருந்தெல்லாம் உங்களுக்கு விடுதலை வந்துவிட்டது.
இயற்கை முறையில் கொசுவை விரட்ட வழிகள்..!
🚫 கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்து கொசுவை விரட்டலாம்.
🚫 புதினாவை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து, வீடு முழுவதும் தௌpக்க வேண்டும். இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் பறந்துவிடும்.
🚫 தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெய்விட்டுக் கலந்து சருமத்தில் தேய்த்தால், நல்ல வாசனை வரும், கொசுவும் நெருங்காது.
🚫 வேப்பிலை, நொச்சி, ஆடாதொடை, குப்பைமேனி இலைகளைக் கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சுவதன் மூலம் கிடைக்கும் பச்சிலை தைலத்தை கொசுவிரட்டியாகப் பயன்படுத்தலாம். அதனுடன் கற்பூரம் சிறிதளவு சேர்த்து காலை, மாலை வேளைகளில் வீட்டுக்கு சாம்பிராணிப் புகையாக போடலாம்.
🚫 யூக்லிப்டஸ் இலைகளை காயவைத்து வீடு முழுவதும் புகைபோட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது.
🚫 பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது.
🚫 வேப்பெண்ணெய் உடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உடலில் தேய்த்துக்கொள்ளலாம். வேப்பெண்ணெய், யூக்லிப்டஸ் எண்ணெய், கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை வீடு முழுவதும் தௌpக்கலாம்.
🚫 எலுமிச்சைப் பழத்தை பாதியாக வெட்டி, அதில் ஆங்காங்கு கிராம்பை நட்டு வையுங்கள். இதன் வாசனை கொசுவை விரட்டும். ஆஸ்துமா நோயாளிகள் கொசுவை விரட்ட, புகை போடுவதைத் தவிர்ப்பது நல்லது.
🚫 ஒரு மண் சட்டியில், தீக்கனல் போட்டு, பச்சை வேப்பிலை அதன் மேல் மஞ்சள் தூள் தூவி விட்டால், அதிலிருந்து வெளியேறும் புகை மூட்டம், கொசு மட்டுமின்றி, மழைக் காலத்தில் வரக்கூடிய மற்ற பூச்சிகளையும் கட்டுப்படுத்தும். இந்தப் புகை, குளிர் காலத்தில் நமக்கு வரக்கூடிய மூச்சுப் பாதை கோளாறையும் சரி செய்யும். சுற்றுசு+ழலுக்கு எந்த கேடும் ஏற்படுத்தாது.
🚫 மாலை நேரத்தில் தேங்காய் நார்களை எரித்து வீடு முழுக்க அதன் புகையைக் காண்பித்தால், ஒரு கொசுகூட இருக்காது. இயற்கை நார்களின் புகையால், உடலுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. தற்போது தேங்காய் நார்கள் கூட கடைகளில் விற்கப்படுகிறது.
🚫 கொசுக்கள் அழிவதற்கு முக்கியமான பொருள், சல்பர். இந்த சல்பர் எங்கு இருந்தாலும், கொசுக்கள் வெளியில் தான் இருக்கும். கற்பூரம் இந்த சல்பரினால் ஆனது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு, அதில் கற்பூரத்தைப் போட்டு வைத்தால், அதில் இருந்து வரும் வாசனைக்கு கொசுக்கள் வீட்டை எட்டிக் கூட பார்க்காது.
🚫 விளக்கு எரிக்க வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய், நல்லெண்ணெய், நெய் போன்றவற்றை பயன்படுத்தினால் கொசு பக்கத்தில் வரவே பயப்படும்.
நாளை டெங்கு காய்ச்சல் பற்றிய முழு விபரங்களைப் பார்ப்போம்!
ழூகுறிப்பு :
நித்ரா ஜோதிடரால் வழங்கப்பட்ட உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment