ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
பெருமாள் அதிசய காட்சி காணலாம் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
இங்கெல்லாம் பெருமாளின் அதிசய காட்சிகளை காணலாம்!
பெருமாள் பற்றிய அரிய தகவல்கள்

✴ விஷ்ணு பகவான் ஒவ்வொரு கோவில்களிலும் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறார். அவர் எந்த வடிவங்களில் எங்கெல்லாம் நமக்கு அருள்புரிகின்றார் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.
✴ திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில் ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீவாரி பாதம் எனப்படும் அந்த இடத்தில் திருமலைவாசனின் பாதச்சுவடுகளை தான் கடவுளாக வழிபடப்படுகின்றன.
✴ திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியின் மார்பில் சிவலிங்கத்தின் அடையாளம் உள்ளது.
✴ திருநெல்வேலிக்கு அருகில் உள்ள நாங்குநேரியில் பெருமாளுக்கு தினமும் மூன்று லிட்டர் எண்ணெய் சாத்தப்படுகிறது. பின்பு அவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
✴ சிங்கபெருமாள் கோவிலில் சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காணலாம். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.
✴ திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பு+தேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.
✴ ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம் திருமயம். ஒரே மலையைக் குடைந்து அமைத்த சிவன்-திருமால் கோயில் அங்கு மட்டும்தான் உள்ளது.
✴ திருச்சி முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோயிலில் பெருமாள் அனைத்து வேதங்களையும் தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார். இதனால் அவர் வேதநாராயணன் என்று பெயர் பெற்றார்.
✴ கர்நாடகத்தில் உள்ள ஸ்ரீரங்கபட்டினத்தில் உள்ள ரங்கநாதர் எழுந்தருளியுள்ள ஆதிசேஷனுக்கு ஏழுதலைகள் இருப்பது வித்தியாசமானது.
✴ காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதிகம். இங்கு பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
✴ மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். இவருடைய கைகளில் சங்கு, சக்கரம் இல்லை. ழூ குறிப்பு :
நித்ரா ஜோதிடரால் வழங்கப்பட்ட உங்களின் சந்தேகங்களுக்கான பதில்கள் Pனுகு வடிவில் பெற இங்கே கிளிக் செய்யுங்கள்.
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment