ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
கொசுக்கள் உருவாகும் தகவல்கள் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
மக்களே கொசு இந்த இடத்திலெல்லாம் கூட உருவாகுமாம்! உஷாரா இருங்க..!!
கொசுக்கள் உருவாகும் இடங்கள்!

➠ கொசு க்யூலிசிடே (உரடiஉனையந) குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினமாகும். இவை மெல்லிய உடல் மற்றும் ஓர் இணை இறக்கைகள், மற்றும் நீண்ட கால்களை கொண்டவையாகும். இவ்வகைப் பூச்சிகளில் பொதுவாக ஆண் கொசுக்கள் தாவரச்சாற்றைப் பருகும். பெண் கொசுக்களே மனிதர்களிடமிருந்தும் பிற உயிரினங்களிலிருந்தும் இரத்தத்தை உறிஞ்சும்.
கொசுவினால் ஏற்படும் பாதிப்புகள் :
➠ மலேரியா, சிக்குன்குனியா, மூளைக்காய்ச்சல், டெங்குக் காய்ச்சல், யானைக்கால் நோய், மஞ்சள் காய்ச்சல், சில வைரஸ் காய்ச்சல்கள் மற்றும் சிகா வைரஸ் நோய் போன்ற நோய்கள் பரவி வருகின்றது.
➠ பாம்பு கடித்தால் மட்டுமே பயந்த காலம் மாறி இப்பொழுது கொசு கடித்தால் பயப்படும் காலமாக மாறிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் தற்போது வேகமாக பரவிவரும் விஷக் காய்ச்சல்களான டெங்குவும் வைரஸ் காய்ச்சல்களும் தான்.
கொசுக்கள் உருவாகும் இடங்கள் :
➠ சிமெண்ட் தொட்டிகள், ஆட்டுக்கல், தேங்காய் ஓடுகள், வாளி, பிளாஸ்டிக் தட்டு மற்றும் கப்புகள், பழைய டயர்கள், திறந்த கிணறு, மூடாத தண்ணீர் தொட்டி, போன்ற இடங்களில் தேங்கி இருக்கும் நீரில் இருந்து கொசுக்கள் ஆனது அதிகம் உற்பத்தியாகிறது.
➠ எனவே அவற்றில் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதுடன் தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும்.
கொசுக்களை ஒழிக்க :
➠ தண்ணீரை அதிக நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்துவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
➠ சேமித்து வைக்கும் தண்ணீரை முறையாக மூடி வைத்து பயன்படுத்த வேண்டும்.
➠ தண்ணீர் சேமிக்கும் தொட்டிகளை ஆறு நாட்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்ய வேண்டும்.
➠ மழைநீர் தேங்கக்கூடிய பொருட்கள் அனைத்தையும் நேரம் கிடைக்கும் போது அப்புறப்படுத்த வேண்டும்.
➠ வீட்டின் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டை சுற்றி எங்கும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.
ஈஈஈகொசுக்களை விரட்டுவதற்கு உண்டான வழிமுறைகளை பற்றி நாளை காண்போம்!,,,
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment