ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
வீட்டில் இருக்கும் விலங்குகள் பற்றிய தகவல் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
வீட்டில் வளர்க்கும் பிராணிகள் நமக்குவரும் ஆபத்தை உணர்த்துமா?
நீங்கள் உங்கள் வியாபாரம்ஃநிறுவனத்தை எங்கள் நித்ரா நாட்காட்டி வழியாக விளம்பரம் செய்ய விரும்புகிறீர்களா? எனில் உடனே அழையுங்கள்...
📞 75501-79835
📞 98653-01050
வீட்டில் வளர்க்கும் பிராணிகள் நமக்குவரும் ஆபத்தை உணர்த்துமா?

✴ நாம் பசுவை வளர்க்கின்றோம் என்றால், கிட்டத்தட்ட நாம் புண்ணியம் பெற்றவர்களாக ஆகிவிடுகிறோம். ஏனென்றால் பசு தனக்கென்று எதுவும் வைத்துக்கொள்வதில்லை, அனைவருக்கும் கொடுக்கக்கூடியது. தாயில்லா குழந்தைகளுக்கும் தன் உணவு மூலம் தாயாகிறது.
✴ பசுவின் முழு உருவத்திலும் தேவர்கள், முப்பத்து முக்கோடி தேவர்கள், சிவன், பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூவர்களும் குடிகொண்டிருப்பதாக ஐதீகம். பசுவின் பின்புறம் லட்சுமி குடிகொண்டிருப்பதாக ஐதீகம். அதனால்தான் அனைவரும் பசுவின் பின்னால் தொட்டுக் கும்பிடுவார்கள்.
✴ ஒரு குடும்பத் தலைவனுக்கோ, அல்லது குடும்பத்தில் உள்ளவர்களுக்கோ வரக்கூடியதை உடனடியாக கண்டுபிடித்து, அந்தப் பிரச்சனையில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்கு எச்சரிக்கை விடுக்கக்கூடிய சக்தி பசுவிற்கு உண்டு. குடும்பத்தில் ஒரு பிரச்சனையோ, துர்மரணமோ அல்லது பொருள் இழப்போ அல்லது களவோ நடக்கயிருந்தால் பசுவின் கண்ணில் இருந்து தண்ணீர் வர ஆரம்பிக்கும்.
✴ இடது கண்ணில் இருந்து தண்ணீர் வந்தால் உடனடியாகப் பிரச்சனை வரும் என்று அர்த்தம். வலது கண்ணில் இருந்து கண்ணீர் வந்தால் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். இதிலிருந்து பசு நமக்கு ஏதோ தெரிவிக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
✴ வீட்டில் ஏதோ பெரும் சண்டை நிகழலாம் அல்லது திடீர் தற்கொலை நிகழலாம் அல்லது பேரிழப்பு உண்டாகும் என்பதை அது அறிவுறுத்தும். மேலும், தொழுவத்தை விட்டு ஓடுனாலோ அல்லது தொழுவத்திற்கே வரமறுக்கிறது என்றால் நில அதிர்வு வரப்போகிறது என்று அர்த்தம்.
✴ அதேபோல, நாய் தொடர்ந்து ஒரு வாரத்திற்கு ஊளையிட்டால் கண்டிப்பாக யாரோ இறக்கப் போகிறார்கள் என்று அர்த்தம். அதிலும், காலையில் சு+ரியன் உதிப்பதற்கு முன்பு, பிறகு மதியம் உச்சி வேளை, அதன்பிறகு சாயங்காலம், அதற்கடுத்து நள்ளிரவு என்று தொடர்ந்து ஊளையிட்டால் பெரிய மரணம், திடீர் மரணம் நிகழப்போகிறது என்று சொல்லலாம்.
✴ அதேபோல, பு+னை அலறிக் கொண்டு கத்தும், அதுபோல செய்தால் வீட்டில் ஏதோ பாதிப்பு வரப்போகிறது அல்லது விபத்து வரப்போகிறது என்று அர்த்தம். கூட்டுக் குடும்பமாக இருப்பவர்கள் பிரியப் போகிறார்கள் என்றும் அர்த்தம். இதுப்போல நம் வீட்டில் உள்ள வளர்ப்பு பிராணிகள் நமக்கு ஆபத்து காலங்களில் எச்சரிக்கை கொடுக்கும்.
இலவச நாட்காட்டியை கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment