கர்ணனின் சிறந்த குணம்
========================

கர்ணன் மகாபாரதத்தில் வருகின்றன கர்ணன் தான் !
கர்ணன் ஒரு சமயம் குளித்து கொண்டு இருக்க ! ஒருவர் வருகின்றார் தனக்கு உதவும் படி கேட்கிறார்
அவர் கேட்டவுடன் சற்றும் தாமதம் செய்யாமல் குளிக்கு இடத்தில் இருந்த தங்கத்தால் ஆன எண்ணெய் கின்னத்தை தனது இடதுபக்கத்தில் இருந்தை அவன் இடது  கையில் எடுத்து கொடுத்தான் !
அதை பார்த்த மந்திரி !
மன்னா ! நாம் எது கொடுத்தாலும் அதை
நமது வலது கரத்தால் தான் தரவேண்டும் ! அதுதான் சிறந்தது என்றார்  ஆமாம் மந்திரி எனக்கும் அது தெரியும் ! நான் அவருக்கு உதவ முடிவு எடுத்து விட்டேன் ! என் இடது பக்கம் இருந்த கிண்ணத்தை இடதுகையில் எடுத்து அதை வலதுகையில் கொடுப்பதற்குள் என் மனம் ஏன் ? இவருக்கு இந்த தங்கத்தால் ஆனதை கொடுக்க வேண்டும் என்று யோசித்து விட்டால் என்ன செய்வது !
அதற்காக தான் அப்படி செய்தேன்
ஒருவருக்கு கொடுக்க நினைத்தால் உடனே கொடுத்து விட வேண்டும் இல்லையென்றால் மனது நம் உதவும் எண்ணத்தை மாற்றி விடும் என்றான் !

உண்மை தானே இந்த கருத்து
ஆகையால் நாம் பிறருக்கு உதவிகள் செய்ய நினைத்தால் உடனே செய்து விட வேண்டும் !

No comments:

Post a Comment