ஊருக்கு உபதேசம் !

   ஒரு பேச்சாளர் இருந்தார் அவரை அந்த ஊரில் இருக்கும் ஒரு மகளிர் அமைப்பு சிறப்புரை வழங்க அழைப்பு விடுத்தார்கள் அவரும் அதை ஏற்றுக்கொண்டு விழாவில் மகளிர் அடிமையைப்பற்றி மிகவும் அருமையாக
பேச துவங்கினார்!
பெண்களே !
நீங்களும் ஆண்களுக்கு நிகரானவர்கள் தான் ! நீங்கள் எந்த ஆணிற்கும் அடிமையில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள் !
வீட்டு வேலை செய்யும் வேலைகாரியா ?
நீங்கள் ஏன் ? ஆண்கள் வீட்டு வேலை செய்தால் என்ன குற்றம் ஆணுக்கு பெண் சமம் !
பெண்கள் மாவு ஆட்டினாள் ஆண்கள் இட்டிலி சுடவேண்டும் !
பெண்கள் வீட்டை சுத்தம் செய்தால்
ஆண்கள் பாத்திரங்களை கழுவ வேண்டும்!
பெண்கள் துணிகளை துவைத்தால் ஆண்கள் கூட சேர்ந்து துணிகளை அலசவேண்டும் !
இப்படி ஆண்களும் வீட்டில் சரிபாதி வேலைகளை செய்யவேண்டும் என்றார் !  கூடி இருந்த பெண்கள் கூட்டம் பெரும் கைதட்டல் கிடைத்தது !
மிகவும் மகிழ்சியில் மிதந்தார் அந்த பேச்சாளர் !
அனைவரும் பாராட்டி பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர் !
நிகழ்ச்சி முடிந்து வீட்டிற்கு வந்தார்
மிகுந்த பசியுடன் வந்தவர் தன் மனைவியை அழைத்து என்ன? உணவு என்றார் !
மனைவி கூறினாள்
இதோ அடுப்பு இருக்கு
ரவை இருக்கு
வாங்க இருவரும் சேர்ந்து சமைக்கலாம்
என்றால் !
தூக்கி வாரிப்போட்டது அவருக்கு
என்னது ? நான் சமைப்பதா உணக்கு என்ன கிருக்கு பிடித்து விட்டதா என்றார்
மனைவி
நீங்கள் தான் மேடையில் ஆண்களுக்கு நிகர் பெண்கள் வீட்டு வேலைகளை ஆண்களும் செய்யவேண்டும் என்று கூறினீர்களே ! என்றாள்
பேச்சாளர் மனைவியின் அருகிள் சென்று அது ஊருக்கு தான் அந்த உபதேசம் நமக்கு இல்லையடி என்றார்

No comments:

Post a Comment