முதியோரை வெறுக்காதே !

ராகுல் வேகமாக அலுவலகம் புறப்பட்டான் தன் மனைவி நீலாவிடம் கூறினான் நீலா நான் வருகின்றேன் குழந்தையை பத்திரமாக பார்த்துக்கொள் என்று சென்றான்.

ராகுல் இப்போதுதான் திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது .
ராகுல் திறமையானவன் ஒரு தனியார் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கின்றான்.
நீலா நன்றாக படித்தவள் அவளும் நல்லவேலையில் இருந்தால் குழந்தை பிறந்ததும் தன் வேலையை விட்டுவிட்டால்
இருவரும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகின்றனர்.

மாலை வேலை முடிந்து வீட்டுக்கு வந்தான் ராகுல் குழந்தை அழுவதை பார்த்து ஏன்? குழந்தை அழுகிறது நீலா என்றான் .
தெரியவில்லை இப்போது தான் அரை மணிநேரமா அழுவுது என்னவென்று தெரியவில்லை !
ராகுல் உடனே மருத்துவரிடம் செல்லலாம் என்று நீலாவையும் குழந்தையும் அழைத்து சென்றான் !
மருத்துவர் மருந்து மாத்திரைகள் கொடுத்து இதை கொடுங்கள் குணமாகிவிடும் என்று கூறி அனுப்பிவிட்டார் அவர் கொடுத்த மருந்து மாத்திரைகள் கொடுத்தும் குழந்தையின் அழுகை நின்றபாடு இல்லை !
குழந்தையின் அழுகுரல் கேட்டு எதிர் வீட்டில்  இருக்கும் ஒருமூதாட்டி வந்தார்

வந்த மூதாட்டி ஏம்மா நீலா குழந்தையை இப்படி அழவிடுறது தப்பு !
குழந்தையை கொடு என்று வாங்கி
அதனை கொஞ்சிக்கொண்டு நீலா கொஞ்சம் நல்லணெய் எடுத்தா என்றார்

நீலாவும் எடுத்து வந்து கொடுத்தால் அதை லேசாக கழுத்தின் இருபகுதியிலும் தடவி குழந்தையின் கைகளிலும் தடவி நீவி விட்டார்
என்ன ஆச்சரியம் குழந்தை சிரிது நேரத்தில் அழுகை நிறுத்தி உறங்கிவிட்டது !
அப்பாடா! என்று பெருமூச்சு விட்டாள் நீலா !
ராகுல் நல்லவேலை அவர்கள் வந்து  குழந்தையை கவனிக்காவிட்டாள் என்ன ஆயிருக்கும் நினைக்கவே பயமாக உள்ளது என்றான் !
என்னதான் மருந்துவர்கள் இருந்தாலும் வீட்டில் ஒரு பெரியவர்கள் இருப்பது போல் வருமா? என்றான்
நீலாவும் ஆமாங்க! என்றால்
இப்போதுதான்
ராகுலுக்கு ஞாபகம் வருகிறது!
தன் தாய் தந்தை நினைவு !
இவர்களுடன் சேர்ந்து இருந்தால் நிம்மதி இருக்காது என்று அவர்களை முதியோர் இல்லத்தில் சேர்த்ததை எண்ணி வருந்தினான் !
மறுநாள் விடிந்தது
ராகுல் தன் தாய் தந்தை இருக்கும் முதியோர் இல்லம் சென்றான்

இருவர்கால்களிலும் விழ்ந்து வணங்கினான்
தாய் தந்தை அழைத்துக்கொண்டு தன் இல்லம் சென்றான் !

பெரியவர்கள் வாழ்வில் நமக்கு நல்வழி காட்டும் தெய்வங்கள் என்பதை உணரவேண்டும்

No comments:

Post a Comment