நாக்குவின் வேலை !

       நாக்கு
====++++++
நம்முடைய புலன்களில் நாக்கும் ஒன்று !
நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் அதன் சிறப்பு !
நாக்கு உணவை உண்ணமட்டும் பயன் படுவதில்லை மேலும் நம் எண்ணங்களை வெளிப்படுத்தவும் பயன் படுத்தப்படுகிறது !
நாக்கிற்கு சுவை அறியும் தன்மையும்
உண்டு என்பதை அறிவோம் !
ஆனால்
மனிதர்கள் இந்த நாக்கை பயன்படுத்தும்
விதத்தில் தான் அவன் வாழ்க்கை சிறக்கும் என்பதை அறிவானா ?
ஒருவரை உயர்த்துவதும் நாக்கு !
ஒருவரை தாழ்த்துவதும் நாக்கு !
ஒருவருக்கு மதிப்பை வழங்குவதும் நாக்கு !
நின்று நிதானமாக நாக்கை பயன் படுத்தினால் மதிப்பு உயரும் !
நாக்கை நாம் எப்படி பயன் படுத்துகின்றோமோ ! அவ்வாறே நம் வாழ்க்கை சிறக்கும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் !
அவ்வாறு செய்தால் வெற்றி மேல் வெற்றியை நமக்கு அது பெற்று தரும் ! 

No comments:

Post a Comment