அர்ச்சுனனுக்கு கண்ணன் உரைக்கின்றார் !

எனது ஆத்மா பெருமைகள் தேவத்தன்மை வாய்ந்தவை அவற்றுள் மேன்மையானவற்றை அர்சுனா உனக்கு உரைக்கின்றேன் . எனது விஸ்தாரத்திர்க்கு அளவில்லை எல்லையில்லை. அர்சுனா! உயிர்கள் அனைத்தின் உள்ளிருக்கும் ஆத்மா நான். அவ்வுயிர்களின் ஆதி நான். இடை நான் ; இறுதியும் நானே !
ஆதித்யர்களில் நான். _விஷ்ணு
ஒளிகளில் நான் _  ஞாயிரு
காற்றுகளில் நான் _ மரீசி
வின்மீன்களில் நான் _ சந்திரன்
வேதங்களில் நான் _ சாமவேதம்
அமரரில் நான் _ இந்திரன்
புலன்களில் நான் _ உள்ளம்
உயிர்களுடன் நான் _உணர்வு
ருத்திரர்களில் நான் _சங்கரன்
செல்வத்தில் நான் _  குபேரன்
வசுக்களில் நான் _ தீ
மலைகளில் நான் _மேரு
புரோகிதர்களின் தலைவன் _ பிரகஸ்பதி நானே !
படைத்தலைவர்களில் நான் _ முருகன்
நீர்நிலைகளில் நான் _ கடல்
மகரிஷிகளில் நான் _ பிருகு
வாக்குகளில் நான் _ஓம்
யக்ஞங்களில் நான் _ ஜபயக்ஞம்
மரங்களில் நான் _அரசு
தேவரிஷிகளில் நான் _ நாரதர்
கந்தவருள்ளே நான் _சித்ரகுப்தன்
 சித்தர்களில் நான் _கபிலமுனி
குதிரைகளில் நான் _ உச்சை சிரவம்
யானைகளில் நான் _ ஐராவதம்
மனிதரில் நான் _ மன்னன்
ஆயுதங்களில் நான் _ வஜ்ரம்
பசுகளில் நான் _ காமதேனு
பிறப்பிப்போரில் நான் _ மன்மதன்
பாம்புகளில் நான் _ வாசுகி
நாகர்களிடையே நான் _ அனந்தன்
நீர்வாழ்வாரில் நான் _வருணம்
பிதிர்க்களில் நான் _அரியமான்
தம்மைக்கட்டினவர்களில் நான் _ எமதர்மன்
அசுரரில் நான் _ பிரகலாதன்
இயங்குபவைகளில் நான் _ காலம்
விலங்குகளில் நான் _ சிங்கம்
பறவைகளில் நான் _  கருடன்
தூய்மை செய்பவைகளில் நான் _ காற்று
படைதரித்தோரில் நான் _  இராமன்
மீன்களில் நான் _ சுறா
நதிகளில் நான் _ கங்கை
படைப்புகளில் நான் _ ஆதியும் அந்தமும்
வித்தைகளில் நான் _ அத்யாத்ம வித்தை
பேசுவோரிடையே நான் _ பேச்சு
எழுத்துகளில் நான் _ அகரம்
புணர்ப்புகளில் நான் _ இரட்டைப்புணர்ப்பு
சாமங்களில் நான் _ பிருகத் சாமம்
சந்தங்களில் நான் _காயத்ரி
மாதங்களில் நான் _ மார்கழி
பருவங்களில் நான் _ இளவேனில்
விருஷ்ணி குலத்தாரில் நான் _ வாசுதேவன்
பாண்டவரில் நான் _ தனஞ்ஜெயன்
முனிவரில் நான் _வியாசர்
கவிகளில் நான் _ சுக்கிர கவி
ஆள்வோரிடம் நான் _ செங்கோல்
வெற்றி விரும்புவோரில் நான் _ நீதி
ரகசியங்களில் நான் _ மௌனம்
ஞானமுடையோரிடம் நான் _ஞானம்
அனைத்து உயிர்களிலும் விதை எதுவோ அது _ நான்
சராசரங்களில் என்னையன்றி பூதம் ஒன்றில்லை.
எனது திவ்விய மகிமைகளுக்கு முடிவில்லை.
எனது விஸ்தாரமான மகிமைகளில் சிறிதே நான்

No comments:

Post a Comment