எது? இருந்தால் முன்னேறலாம் !

கவலை யுடன் ஒரு மனிதன் இருந்தான் அவனை மகிழ்ச்சியின் கடவுள் பார்த்து விட்டு அவனுக்கு உதவ என்னி அவனிடம் சென்றார்
ஏன் ? மனிதா கவலையுடன் இருக்கின்றாய் என்றார்
அதற்கு அவன் பணம் இல்லை என்னிடம்
இல்லை என்றான் !
கவலை படாமல் இரு நான் தான் மகிழ்ச்சியின் கடவுள் உனக்கு மகிழ்ச்சியை வழங்கட்டுமா ? என்றார்
அவனோ ! மகிழ்ச்சியும் வேனாம் ஒன்றும் வேண்டாம் எனக்கு நிறைய பணம் தான் வேண்டும் என்றான் !

கடவுள் அவன் அறியாமையை நினைத்து சிரித்து விட்டு அவன் எதிர் பார்த்ததை விட பத்து மடங்கு அதிகமாக பணம் கொடுத்து விட்டு நாளை வருகின்றேன் என்று சொல்லி மறைந்து விட்டார்
அவன் பணத்தை பார்த்ததும் மகிழ்ச்சி வந்ததை விட அவன்னுள் பயம் தான் மேலோகி இருந்தது
இந்த பணத்தை நான் எப்படி பாது காப்பேன் என்ற கவளையும்
என்னிடம் இவ்வளவு நிறைய பணம் இருப்பது யாருக்காவது தெரிந்தால் என் உயிருக்கு ஆபத்து வருமோ என்று பயந்தான்
அன்று இரவு முழுவதும் கவலையும் பயமும் மாறிமாறி வந்ததால் உறங்க முடியாமல் தவித்தான்
மறுநாள்
மகிழ்ச்சியின் கடவுள் வந்தார்
என்ன மனிதா நலமா ?
என்றுக்கேட்டார்
அவரை பார்த்ததும் அவர் கால்களில் வீழ்ந்து கடவுளே இந்த பணத்தை எல்லாம் நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள் இதனால் என்னிடம் இருந்த கொஞ்ச நிம்மதியும் போச்சு என்றான்
இறைவன் சரி எடுத்துக்கொள்கிறேன் அதற்கு பதிலாக உனக்கு என்ன வேண்டும் என்றார்
இவன் நீங்கள் சொன்ன மகிழ்ச்சியை
தாருங்கள் என்றான் !
அவன் மனம் மறுகணம் மகிழ்ச்சியில் முழ்கியது ! உள்ளம் மகிழ்ச்சியில் இருந்ததால் அவன் ஈடுப்பட்ட வேலைகளை மிகவும் சிறந்த முறையில் முடித்து
பெரிய செல்வந்தனாக மாறிவிட்டான் !
நம் மனம் மகிழ்ச்சியுடன் இருந்தால் நாம் செய்யும் செயல்களில் வெற்றியை தேடி தரும் !!!

நன்றி

No comments:

Post a Comment