ஒரு முக்கிய செய்தி !

ஒரு முக்கிய செய்தி
*********************
நாம் வாரிசுகள் இந்த உலகில் நலமாக வாழும் நிலையை நாமெல்லாம் இணைந்து உருவாக்க வேண்டும் !

இன்று உலகமே எதிர் கொள்ள வேண்டிய விஷயம் !
உலக வெப்பமாதலை தடுப்பது ஆகும்

புவி வெப்பமயமாதல் தான் ஒட்டுமொத்த பூமியின் பிரதான சவாலாக இருக்கிறது
பூமியில் இருந்து வெளியேறும்
கார்பன் வாயு அதிகரிப்பால்
வளிமண்டலத்தில் உள்ள ஓசோன் படலத்தின் சேதம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது

இதனால் புவியின் வெப்பம் அதிகரித்து
துருவப்பகுதியில் உள்ள பனிப்பாறைகள் வேகமாக உருகத் தொடங்கியுள்ளன
தன் விளைவாக ஒரு பக்கம் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து கரையோரப்பகுதிகளை விழுங்கி வருகிறது !
இன்னொரு பக்கம் கடல் நீரின் சுழற்சி மாற்றம் ஏற்பட்டு பாதகமான பருவநிலை மாற்றங்கள் நிகழ்கிறது
அதனால் மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் இந்த வெப்பமயமாதலை தடுத்து நிறுத்த பொறுப்பு உள்ளது என்பதை தெரிந்து
அதற்கான முயற்சியில் ஈடுபட்டு உலகளாவிய வெப்பமாதலை தடுத்து நிறுத்துவோம் என்று உறுதி மொழி ஏற்ப்போம் !
முடிந்தவரை மரங்களை வளர்ந்து உலகை அழிவில் இருந்து காத்து
நம் சந்ததிக்கு ஒரு வழூமையான உலகத்தை கொடுப்போம்

நன்றி

No comments:

Post a Comment