ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
குணத்தை சொல்லும் உள்ளங்கை
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
குணத்தை சொல்லும் உள்ளங்கை..!

🌿 ஒருவர் கறுப்பாகவோ, சிவப்பாகவோ இருக்கலாம். ஆனால் அவர்கள் உள்ளங்கையைப் பொறுத்தவரை, சிவப்பு, அதிக சிவப்பு, இளஞ்சிவப்பு, மஞ்சள் ஆகிய நான்கு வண்ண அமைப்பில் இருக்கும். எனவே உள்ளங்கையின் வண்ணத்தை வைத்து அவர்களின் குணத்தைப் பற்றி பார்க்கலாம்.
ஆழ்ந்த சிவப்பு நிற உள்ளங்கை :
🌿 இந்த நிறம் கொண்டவர்கள் கொஞ்சம் சுயநலவாதிகளாக இருப்பர். பணத்திலும், பதவியிலும் அதிகமான ஈடுபாடு உடையவர்கள். பேச்சில் கடுமையான சுபாவம் உடையவர்கள். மிகவும் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். சுய நலத்துக்காக எதையும் செய்பவர்களாக இருப்பார்கள்.
சிவப்பு நிற உள்ளங்கை :
🌿 குங்குமம் போன்ற சாதாரண சிவப்பு நிறமுடைய உள்ளங்கை கொண்டவர்கள், அதிகமாக கோபப்படக் கூடியவர்களாக இருப்பர். ஆனால், அதற்கு சமமாக அதிக பற்றும் பாசமும் உடையவர்களாக திகழ்வர். நினைத்ததை முடிக்கும் திறன் கொண்டவர்கள். ஆனால், எதிலும் அவசரப்படுவார்கள். சற்று குறுகிய மனப்பான்மை உடையவர்கள்.
இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை :
🌿 ரோஜா இதழைப் போல இளஞ்சிவப்பு நிற உள்ளங்கை உடையவர்கள், ஆரோக்கியமான தேகமும், மனமும் உடையவர்கள். நிதானமும் கட்டுப்பாடும் உள்ளவர்கள். அறிவாளியாகவும், திறமைசாலிகளாகவும், பிறருக்காக வாழக்கூடியவர்களாகவும் இருப்பார்கள். நேர்மை, நாணயம், ஒழுக்கம் உள்ளவர்கள். எல்லோராலும் விரும்பப்படுவார்கள் மற்றும் நம்பத்தகுந்தவர்களாக இருப்பர்.
மஞ்சள் நிற உள்ளங்கை :
🌿 இவர்களுக்கு ஆரோக்கியக் குறைபாடு இருக்கும். அதிகம் பயந்த சுபாவம் உடையவர்கள். மனோபலம் இல்லாமல் பலவீனமானவர்களாக இருப்பர். அறிவாற்றல் குறைவாகவும், சிறிது சோம்பேறித்தனமும் இவர்களிடம் இருக்கும். யாரையும் எளிதில் நம்பமாட்டார்கள்.
உள்ளங்கையின் அகலத்தை வைத்து குணத்தை பார்ப்போம்.
மிக அகலமான உள்ளங்கை :
🌿 நீளம் குறைவாகவும், மிக அதிக அகலம் உள்ளதாகவுமான உள்ளங்கையைக் கொண்டவர்கள் அடிக்கடி முடிவுகளை மாற்றும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். திட்டமிட்டு செயல்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் பல காரியங்களில் ஈடுபட்டு, எதிலும் வெற்றி பெறாமல் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படும்.
அகலமான உள்ளங்கை :
🌿 கையின் நீளத்துக்குத் தகுந்த அகலம் கொண்ட உள்ளங்கையை பெற்றிருப்பவர்கள், நம்பிக்கைக்கு உரியவர்கள். திட்டமிட்டு செயல்படுவார்கள். கொள்கையில் உறுதி கொண்டவர்கள். எதையும் செய்து முடிக்கும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள்.
குறுகலான உள்ளங்கை :
🌿 மிக நீளமாக அமைந்து, அகலம் குறைவாகத் திகழும் உள்ளங்கையைப் பெற்றவர்கள், மிகவும் பலவீனமானவர்கள். இவர்களால் எதையும் சாதிக்க முடியாத நிலை ஏற்படும். அதனால் தங்கள் தோல்விக்குப் பிறரை குறை சொல்வார்கள்.
மென்மையான உள்ளங்கை :
🌿 உள்ளங்கை பஞ்சு போல் இருந்தால், அவர்கள் மென்மையானவர்கள். கற்பனை வளம் கொண்டவர்கள். பரந்த மனப்பான்மை கொண்டவர்கள். பொதுவாக பெண்களுக்கு இந்த அமைப்பு உண்டு. ஆண்களின் கை இதுபோல் இருந்தால், அந்த நபரிடம் உயர் பண்பும், மென்மையும் மேலோங்கியிருக்கும். திறமைசாலியாகவும், அறிவாளியாகவும் திகழ்வார்.
கடினமான உள்ளங்கை :
🌿 உள்ளங்கை கடினமாக இருந்தால், முரட்டு சுபாவம் கொண்டவர்களாகவும், பிடிவாதம், கர்வம், மற்றும் சுயநலம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மூளையைவிட உடல் பலத்தில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். உடல் உழைப்பு சார்ந்த தொழில் செய்வார்கள்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment