கண் திருஷ்டி தோஷம் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கண் திருஷ்டி தோஷம் !  👀 கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். கோபம், பொறாமை, குரோதம், விரோதம், பகைமை போன்ற விஷ எண்ணங்கள் கொண்ட மனம் படைத்தவர்களின் கண்களிலிருந்து வெளிவரும் நச்சுக்கதிர்களுக்கு தோஷங்கள் உண்டு. 👀 அந்த கண்பார்வைக்கு தீமைகளை விளைவிக்கும் அபார சக்தி உண்டு. இதை தான் கண்திருஷ்டி தோஷம் என்கிறார்கள். பிறரின் வாழ்க்கை வளர்ச்சிகள், முன்னேற்றங்கள், உயர்வுகள், நல்லநிலைகள் போன்றவற்றை கண்டதும் மற்றவர்களுக்கு தாங்க முடியாத வயிற்றெரிச்சல் ஏற்படக்கூடும். 👀 இந்த கெட்ட எண்ணங்களின் ஒட்டு மொத்த உருவமாக திகழ்பவரின் கண்பார்வை சக்தி வாய்ந்தது. அழிவை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. இத்தகையோரின் கண்பார்வையே திருஷ்டி தோஷமாக பிறரை பாதிக்கச் செய்கிறது. பணக்காரர்களுக்கும், பதவியில் இருப்பவர்களுக்கும், வெற்றியாளர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் மற்றவர்களால் திருஷ்டி தோஷம் ஏற்படுவது இயல்பு. 👀 அதனால்தான் 'கல்லடிபட்டாலும் படலாம். ஆனால், கண்ணடி மட்டும் படவே கூடாது" என்பார்கள். இவ்வாறு திருஷ்டி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பல இன்னல்கள், இடையு+றுகளை சந்திக்குமாறு பல எதிர்வினை சு+ழ்நிலைகள் ஏற்பட்டுவிடும். கிரகப் பார்வை தோஷங்கள் : 👀 பார்வைகளிலே சுப பார்வை, அசுப பார்வை என இருவகை உண்டு. ஜாதகத்தில் குரு பார்வை மிகவும் சிறப்பாகும். குரு பார்க்க தோஷ நிவர்த்தி உண்டு. அதேபோல் நீச கிரக பார்வை 6, 8, 12ம் அதிபதிகளின் சேர்க்கை பார்வை பல கெடுபலன்களைத் தரும். 👀 தோஷ ஆதிபத்தியம் பெற்ற சனிபார்வையால் பல தடைகள், இடையு+றுகள் ஏற்படும். உச்ச பலம் பெற்ற கிரகத்தின் பார்வை யோகத்தை செய்யும், நீச பலம், தீய சேர்க்கை உள்ள கிரகத்தின் பார்வை தோஷத்தை கொடுக்கும். 👀 பொதுவாக 6, 8, 12ம் தசைகள் வரும்போது சில மாற்றங்கள் உண்டாகும். அதேபோல் ராகு, கேது, சந்திரன், சனி ஆகியவை சாதகமில்லாத வீடுகளில் இருந்துகொண்டு தசா நடக்கும்போது கெடுபலன்கள் அதிகம் இருக்கும். கண்திருஷ்டி, பொறாமை, சு+ன்யம் ஏவல் எல்லாம் இந்த காலக்கட்டத்தில்தான் வேலை செய்யும். லக்னம், லக்னாதிபதி, சந்திரன் ஆகிய மூன்று விஷயங்களில் பலம் குறைந்த ஜாதகங்கள்தான் மிக அதிகமாக பாதிக்கப்படுகின்றன. 👀 லக்னம், ராசியில் நீச்ச கிரகம் வந்து அமரும்போது காரியத்தடை, வீண் வம்புகள், பொருள் நஷ்டம் போன்றவை வந்து நீங்கும். கெட்ட திசைகள், நீச்ச அம்சம் உள்ள திசைகளில்தான் இந்த கண் திருஷ்டி, பொறாமை போன்றவை ஒன்று சேர்ந்து வரும். கிரக திசா புத்தி அமைப்புகள் வலுவாகவும், யோகமாகவும் இருந்தால் திருஷ்டியின் வேகம் தணிந்து விடும். கண் திருஷ்டி போக்கும் பரிகாரம் : 👀 ஒவ்வொருவரின் ஜாதகப்படியான கிரக நிலைகள், தசைகளை அனுசரித்து செய்யப்படும் பரிகார முறைகள், தனிப்பட்ட வகையில் பலன் தரும். பொதுவான பரிகார முறைகள் உள்ளன. அவை 👀 வீட்டுக்கும், அலுவலகத்துக்கும் வருபவர்களின் பார்வையையும், கெட்ட எண்ணங்களையும், திசை திருப்புவதற்கு பெரிய முகம் பார்க்கும் கண்ணாடியை வரவேற்பறையில் அல்லது வீட்டின் உள்வாசலில் வைக்கலாம். 👀 மீன் தொட்டி வைத்து அதில் கருப்பு, சிகப்பு மீன்களை வளர்க்கலாம். கண் திருஷ்டி கணபதி படம் வைக்கலாம். 👀 வாசலில் கற்றாழை, சப்பாத்தி கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா செடி ஆகியவற்றை வளர்க்கலாம். இதனால் சகல திருஷ்டி, தோஷம் நீங்கி செல்வ வளம், மனநிம்மதி மற்றும் மகிழ்ச்சி பெருகும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment