ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
மகா புஷ்கரம் விழா ! 144ஆண்டுக்கு பின்
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/XOqGPp
மகா புஷ்கரம் விழா ! 144 ஆண்டுகளுக்கு பின் !

குரு பகவான், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை, கன்னி ராசியில் இருந்து, காவிரி நதிக்குரிய துலாம் ராசிக்கு பிரவேசிக்கும் போது, நடத்தப்படுவது தான் காவிரி புஷ்கரம் விழா.
இந்த ஆண்டு குருபகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு இடம் பெயர்ந்துள்ளார். துலா ராசிக்குரிய காவிரி நதியில் செப்டம்பர் 12ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை புஷ்கரம் விழா நடக்கிறது.
மகா புஷ்கரம் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் விழாவாக கருதப்படும். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள துலாக்கட்ட காவிரிக்கரையில் இந்த மகா புஷ்கர விழாவை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. கங்கையில் தினமும் நீராடினால் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அந்த புண்ணியம் மயிலாடுதுறை துலாகட்ட காவிரி ஆற்றில் புனித நீராடினால் கிடைத்துவிடும் என்பது ஐதீகம்.
புஷ்கரம் விழா :
நவகிரகங்களில் ஒருவரான வியாழன் ஒரு முறை பிரம்மனை நோக்கி தவம் இருந்தார். குருவின் தவத்தை கண்டு மகிழ்ந்த பிரம்மன், குருவின் முன் தோன்றி அவரின் கோரிக்கையை கேட்டார். குரு, தங்களின் கமண்டலத்தில் உள்ள புஷ்கர தீர்த்தத்தை எனக்கு தாருங்கள் என்று கேட்டார். பிரம்மனும் தருவதாக ஒப்புக்கொண்டார். பிரம்மனின் கமண்டலத்தில் இருந்த புஷ்கரம், 'என்னை உங்களிடம் இருந்து பிரித்து விடாதீர்கள்" என, பிரம்மனிடம் வருந்தி கெஞ்சி கேட்டுக் கொண்டது. இதனால், பிரம்மன், குருவுக்கும், புஷ்கர தீர்த்தத்திற்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டார்.
புஷ்கரமானது, குரு பகவான் சஞ்சரிக்கும் மேஷம் முதல் மீனம் வரை உள்ள 12 ராசிகளிலும், அந்தந்த ராசிக்குரிய புண்ணிய நதிகளிலும் வாசம் செய்வதுடன், மக்களுக்கும் நன்மை செய்ய வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. இதன்படி, புஷ்கரம் விழா, ஒவ்வொரு வருடமும், குருபகவான் ஒரு ராசியில் இருந்து, மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடப்பது வழக்கமானது. குருப்பெயர்ச்சி காலத்தில், அந்தந்த ராசிக்குரிய நதிகளில், 12 நாட்கள் பிரவேசம் செய்வதாக, புராணங்கள் கூறுகின்றன.
ராசிகளும் அதற்குரிய புண்ணிய நதிகளும் :
மேஷம் - கங்கை, ரிஷபம் - நர்மதை, மிதுனம் - சரஸ்வதி, கடகம் - யமுனை, சிம்மம் - கோதாவரி, கன்னி - கிருஷ்ணா, துலாம் - காவிரி, விருச்சிகம் - தாமிரபரணி, தனுசு - பிரம்மபுத்ரா, மகரம் - துங்கபத்திரா, கும்பம் - சிந்து, மீனம் - பரணீதா ஆகிய நதிகளில், குரு பகவான் எந்தெந்த ராசிகளில் இருக்கிறாரோ, அந்தந்த நதிகளில் புஷ்கரம் தங்கி இருப்பதுடன், அந்த சமயத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் ஆகியோர் ஒன்றாக இருந்து, மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர் என்பது ஐதீகம்.
சிறப்பு :
144 ஆண்டுகளுக்கு பின் வரும் மகா புஷ்கரம் விழாவை, காவிரி பாயும் எல்லா இடங்களிலும் கொண்டாடலாம்.
கன்னி, துலாம், விருச்சிக ராசியுடையோர், புனித நீராடுவதால் நல்ல பலன்களை பெறுவர்.
இவ்விழாவில் சிறப்பு ஹோமங்கள், வேத திருமுறை பாராயணங்கள், ஆன்மிக சொற்பொழிவுகள், நாம சங்கீர்த்தனம், காவிரியில் ஆரத்தி வழிபாடுகள் நடைபெற உள்ளன.
பலன்கள் :
இந்த நாட்களில், மக்கள் இப்புனித நதிகளில் நீராடினால், துன்பங்கள் நீங்கி, நல்வாழ்வு வாழ்வர்.
புஷ்கர காலங்களில், காவிரியில் நீராடுவதால் பிதுர் தோஷம், பிரம்மஹத்தி தோஷம், நதி தோஷம் மற்றும் பலவகை தோஷங்கள் நீங்கும்.
இந்த 12 நாட்களில் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினால், 3.50 கோடி தீர்த்தங்களில் நீராடிய பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/XOqGPp
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment