லக்னத்தில் சுபகாரியம் செய்யலாம்?

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB லக்னத்திலும் சுபகாரியம் செய்யலாம் !  💥 நல்ல நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்களில் சுபகாரியங்களை செய்தால் அவை தடையின்றி நடைபெறும். எந்த ஒரு நல்ல செயலையும் செய்யும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்ப்பது அவசியம். நல்ல லக்னங்கள் நடைபெறும் நேரத்திலும் சுபகாரியங்களை செய்தால் அவை தடையின்றி நடக்கும். திருமணம் : 💥 ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, தனுசு, துலாம், கும்பம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரத்தில் திருமணம் செய்தால் கணவனும் மனைவியும் ஒற்றுமையாக வாழ்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கல்வி கற்றல் : 💥 மேஷம், மிதுனம், கடகம், கன்னி, தனுசு, மகரம், மீனம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரத்தில் குழந்தைக்கு கல்வி கற்க தொடங்கினால் நல்ல கல்வியறிவு கிடைக்கும். கல்வியால் பல மேன்மைகள் உண்டாகும். விதை விதைத்தல் : 💥 ரிஷபம், கடகம், சிம்மம், மீனம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரத்தில் விதை விதைத்தால் பயிர் விளைச்சல் முதல் தரமாக இருக்கும். தங்க நகை : 💥 ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரங்களில் தங்க நகை அணிந்துக் கொண்டால் மேலும் மேலும் தங்க நகை சேர்ந்துக் கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும். வீடு கட்டும் வேலை : 💥 ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரங்களில் வீடு கட்டும் வேலையைத் தொடங்கினால் வேலை தடைப்பட்டு நிற்காமல் நடைபெற்று கொண்டே இருக்கும். கிரகப்பிரவேசம் : 💥 ரிஷபம், மிதுனம், சிம்மம், கன்னி, துலாம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரங்களில் கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் செல்வம் செழிக்கும். மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். நிலம் வாங்குதல் : 💥 சிம்மம், தனுசு, மகம் ஆகிய லக்னங்கள் நடைபெறும் நேரத்தில் நிலத்தை வாங்கினாலும் அல்லது விற்றாலும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment