தொழில் அமைய கிரகங்களுக்கு சம்பந்தம் உண்டா !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB நல்ல தொழில் அமைய கிரகங்களுக்கும் சம்பந்தம் உண்டா?  🌀 ஜாதகத்தில் எந்த கிரகமானது வலிமை பொருந்தியிருக்கின்றதோ அதற்கேற்ப அந்த ஜாதகனுடைய தொழிலானது அமைகின்றது. ஒருவனின் உத்யோகம் சம்மந்தப்பட்ட விஷயங்கள் வலிமையாக அமைய ஜாதகனின் ஜென்ம லக்னம் வலிமை வாய்ந்ததாக அமைய வேண்டும். 🌀 ஒருவருக்கு தொழில் நிரந்தரமாக அமைய ஜாதக அமைப்பும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் கிரகங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. 🌀 தொழில் தொடங்கும் போதும், திருமணம், கிரகபிரவேஷம் போன்ற முக்கியமான வேலைகள் தொடங்கும் போது லக்னம், லக்னாதிபதி கெடாமல் இருக்க வேண்டும். மேலும் 8ம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். 🌀 துணிமணிகள், வண்ண ஆடைகள் விற்பனை செய்ய புதன், சந்திரன் ஆதிக்கம் இருக்க வேண்டும். 🌀 வாகன ஓட்டுநர்களுக்கு சனி, சந்திரன் ஆகிய கிரகங்கள் ஒத்துழைப்பு வேண்டும். 🌀 ஜோதிடத் தொழில் அமைய புதன், குரு துணையுடன் 2ம் பாவம் கெடாமல் இருக்க வேண்டும். 🌀 புதன், குரு கிரகம் ஏஜெண்ட் தொழிலுக்குரிய கிரகம். மளிகை கடை வியாபாரம் அமைய புதன், குருவே காரணமாக அமைகிறது. 🌀 சுக்கிரன், குரு, செவ்வாய் ஆகிய கிரகங்களின் துணை இருந்தால் ஓட்டல் தொழிலில் லாபம் பார்க்கலாம். 🌀 எழுது பொருட்கள் பேனா, பென்சில் விற்பனை செய்து லாபம் அடையக்கூடிய கிரகம் புதன், குரு ஆகும். 🌀 2, 11ம் இடத்தில் குரு, புதன், செவ்வாய் சம்பந்தம் பெற்று இருந்தால் டெலிபோன் துறையில் பணிபுரியலாம் அல்லது டெலிபோன் துறையில் அதிக லாபத்தை ஈட்டலாம். 🌀 சினிமாத் துறையில் ஸ்டுடியோ வேலைகள், மேனேஜர், நுட்பமான கருவி, கேமரா, விளம்பரம் போன்ற வேலைக்கு புதன் கிரகமே மூலக் காரணமாக இருக்கிறார். 🌀 சு+ரியன், சந்திரன், கேது, செவ்வாய் ஆகிய கிரகங்கள் அனைத்தும் ராசிக்கு 10ம் பாவத்திற்கு தொடர்பு இருந்தால் நர்ஸ் பணி செய்வர். 🌀 கலைத்துறைக்கு அதிபதி சுக்கிரன் என்பதால் ரிஷப, துலாம் லக்னக்காரர்கள் நிறைய பேர் சினிமாத் துறையில் இருக்கிறார்கள். 🌀 கட்டிட வேலை செய்பவர்களுக்கு ஜீவஸ்தானம், பத்தாம் பாவத்திற்கும், செவ்வாய், சுக்கிரன், சனி சம்பந்தம் இருக்க வேண்டும். 🌀 செவ்வாய், புதன், சுக்கிரன் 1, 2, 10, 11ல் நின்று சந்திரன் சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் தையல் தொழில் செய்வர். 🌀 வாகனங்கள் ஓட்டும் வேலை, 3ம் பாவத்தில் 10க்குடையவர்கள் சுக்கிரன், சனி, சந்திரன் சம்பந்தம் பெற்றிருக்க வேண்டும். 🌀 தபால்துறை வேலைக்கு புதன் கிரகத்தின் ஆதிக்கம் தான் காரணம். அத்துடன் சனி சேர்ந்து 1, 2, 10, 11ல் தொடர்பு இருந்தால் ஜாதகர் தபால்காரராக இருப்பார். 🌀 வங்கி வேலை கிடைக்க குரு ஆதிக்கம் பெற்றிருக்க வேண்டும். குரு, புதன் தொடர்பு இருந்து 1, 2, 10, 11ல் தொடர்பு இருந்தால் வங்கியில் கிளார்க்காக இருப்பார். 🌀 சனி 1, 2, 10, 11ல் சம்பந்தம் ஏற்பட்டு இருந்தால் துப்புரவு தொழில் செய்வார். 🌀 சு+ரியன், செவ்வாய் பலம் பெற்று 1, 2, 10, 11ல் தொடர்பு இருந்தால் மருந்து கடை வைத்து நடத்துவார். 🌀 எந்த கிரகம் தொழிலுக்கு உகந்ததாக வலிமை பெற்று இருக்கின்றன என்று உறுதி செய்து அந்த கிரகத்தின் தொழில் காரகங்களை பரிந்துரைக்க வேண்டும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment