விஷ்ணு பகவான் பற்றி தெரிந்து கொள்வோம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB விஷ்ணுவை பற்றி நாம் அறிந்ததும் அறியாததும் !  ⭐ காக்கும் கடவுளான திருமால் உலக உயிர்களை துன்பங்களிலிருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழ பத்து அவதாரங்களை இப்புவியில் செய்தார். இவர் திருமால், கேசவன், பெருமாள் என்றும் அறியப்பெறுகிறார். திருமாலின் ஏகாதசி : ⭐ ஏகாதசி மாதந்தோறும் வருகிறது. இதில் மூன்று ஏகாதசிகள் மிகவும் நற்பலன்களை தரும். ஆனி மாதம் வரும் ஹரியன ஏகாதசி திருமால் சயனம் மேற்கொள்ளும் நாள். ஆவணி மாதம் வரும் சுக்ல ஏகாதசி திருமால் படுக்கையில் புரளும் நாள். ஐப்பசி மாதம் வரும் வீயுத்தான ஏகாதசி திருமால் படுக்கையிலிருந்து எழும் நாள். இந்த ஏகாதசி நாட்களில் விரதமிருந்து வழிபட்டால் நற்பலன்களை பெறலாம். துளசி : ⭐ திருமால் கோவில்களில் யார் ஒருவர் துளசிச்செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்த்து வருகிறாரோ அவருக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். நரசிம்மர் வழிபாடு : ⭐ நம்முடைய வாழ்வில் இழந்த பொருட்களை மீட்டெடுப்பதற்கு தினந்தோறும் நரசிம்ம மந்திரத்தை மனஅமைதியுடன் சொல்ல வேண்டும். ⭐ நரசிம்மரை தொடர்ந்து வழிபடுவதால் பில்லி, சு+னியம், செய்வினை, எதிரிகளால் தொந்தரவு போன்ற பிரச்சனைகளில் இருந்து காப்பார். ⭐ சந்திப் பொழுதில் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றிய நரசிம்மரை தொடர்ந்து 9 சுவாதி நட்சத்திர தினத்தன்று பு+ஜித்து வந்தால் கடன்கள், நோய்கள், திருமணத் தடை தீரும். ⭐ வெற்றியை எதிர்நோக்கி காத்து கொண்டிருப்பவர்கள் நரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்று வழிபட வேண்டும். ⭐ நரசிம்மரை வழிபடுவதால் ஆனந்தமான வாழ்வும், வளமான வாழ்க்கையும் பெறலாம். ஆஞ்சநேயர் : ⭐ ஆஞ்சநேயரை சாந்த வடிவில் தான் வழிபட வேண்டும். மஞ்சள் கலந்த குங்குமம், துளசி, வெண்ணெய் போன்றவற்றால் அர்ச்சனை செய்யலாம். ⭐ அனுமனின் அருள் வேண்டுபவர்கள் இராம மந்திரத்தை தினசரி கூறினால் போதும். விஷ்ணுவின் சிறப்புகள் : ⭐ விஷ்ணு கோவில்களில் பக்தர்களுக்கு தீர்த்தம், மஞ்சள் காப்பு, திருத்துழாய், சிவப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன. சடாரி பக்தர்களின் தலையில் வைப்பது திருமாலின் திருவடியே நம் தலையில் படுவதாக ஐதீகம். ⭐ திருமாலின் உடலிலிருந்து உருவானதே எள்ளும், தர்ப்பையும். சிரார்த்த காலத்தில் இவற்றைப் பயன்படுத்தினால் விஷமிகள் விரட்டியடிக்கப்படுவார்கள். ⭐ மனதை ஒருமுகப்படுத்தும் சக்தியும் எள்ளிற்கு உண்டு. தர்ப்பை உபயோகிக்காமல் செய்யும் கர்மாக்கள் முழுமை பெறாது என்பது ஐதீகம். ⭐ கோவில்களில் வலம் வரும்போது திருமாலுக்கு 4 முறையும், லட்சுமிக்கு 4 முறையும், ஆஞ்சநேயருக்கு 11 அல்லது 16 முறையும் பிரதட்சிணம் செய்ய வேண்டும். ⭐ திருமால் கோவிலுக்கு சென்று முதலில் அவரின் முகத்தை பார்த்து வணங்கக் கூடாது. முதலில் அவரின் திருவடிகளைப் பார்த்து வணங்கிய பின்னரே படிப்படியாக அவரின் முகத்திற்கு வர வேண்டும். ⭐ கடன் பிரச்சனைகளில் இருந்து விடுபட லட்சுமி குபேர பு+ஜையை பு+ச நட்சத்திரம், பௌர்ணமி, வெள்ளிக்கிழமை போன்ற நாட்களில் செய்ய வேண்டும். ⭐ நோய்கள் நீங்கி நலம் பெற புதன்கிழமை, பௌர்ணமி நாட்களில் தன்வந்திரியை வழிபட வேண்டும். ⭐ செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் சக்கரத்தாழ்வாரை வழிபட்டு வந்தால் எதிரிகள் விலகுவர். ⭐ சிவாலயங்களில் சிவனை தரிசித்த பிறகு சற்று நேரம் கிழக்கு திசை நோக்கி அமர வேண்டும். அதன் பின் வீட்டிற்கு செல்ல வேண்டும், சிவகணங்கள் கோவில் வாசல் வரை வருவதாக ஐதீகம். ஆனால் திருமால் கோவில்களில் அவ்வாறு அமர வேண்டிய அவசியமில்லை. விஷ்ணுவின் தூதர்கள் வீடுவரையிலும் நம்மோடு வருவதாக ஐதீகம். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment