ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
விவசாயமம் செய்ய ஏற்ற நாள் !
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
விவசாயம் செய்ய ஏற்ற நாள்....!!
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதாவது ஒரு சடங்குகள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அனைவரும் தினசரி காலண்டரையோ அல்லது பஞ்சாங்கத்தையோ பார்த்து தான் நாள் குறிப்போம். அந்த வகையில் விவசாயம் செய்ய உகந்த நாள்கள் பற்றிப் பார்ப்போம்.
🌱 'ஆடிப்பட்டம் தேடி விதை" என்பதற்கேற்ப விதை தூவ, விளை நிலங்களில் கால்வைக்க உகந்த மாதமாகவும் ஆடிமாதம் கருதப்பட்டது. விவசாயிகள் சேற்றிலே காலை வைத்தால் தான், நாம் சோற்றிலே கைவைக்க முடியும் என்பதால் நம் பசிப்பிணி தீர நடவுத் தொழிலுக்கு ஏற்ற மாதமாக ஆடி மாதம் கருதப்படுகின்றது.
🌱 ஆனி - ஆடி மாதங்களில் புதுப் புனலாக ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுக்கின்ற காலம். வளமையையும், செழுமையையும், மகிழ்ச்சியையும் தரவல்ல காலம் என்பது விவசாயத்தின் ஆரம்பக் காலமும், நிறைவுக் காலமும் தான்.
🌱 பு+மித் தாயே சு+ல் கொண்டு, பயிர்கள் அனைத்தையும் கருக் கொள்கின்ற காலம். விவசாயத்தின் காரக கிரகங்கள் சந்திரன் மற்றும் சுக்கிரன் ஆகும். விவசாயம் செழிக்க வளம் பெருக அம்பிகையை வழிபடக்கூடிய காலம் ஆனி - ஆடி மாதம். இந்த காலத்தில் அம்பிகையை வணங்கினால், விவசாயம் பெருகி உலகம் சுபிக்ஷமாக விளங்கும். சுக்கிரன் மற்றும் சந்திரனை மகிழ்வித்தால் விவசாயம் பெருகும் என்பது நிதர்சனம்.
ஏற்ற கிழமைகள் :
🌾 திங்கட்கிழமை : விவசாயிகள் கிணறு தோண்டுவதற்கும், பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கும் சிறப்பான நாளாக திங்கட்கிழமை திகழ்கின்றது. மேலும் விதையிடுதல், உரமிடல், வியாபாரம் துவங்க ஏற்ற நாள்.
🌾 புதன் கிழமை : விவசாயிகள் வயல்களில் விதைப்பதற்கும், இடுபொருள்களை இடுவதற்கும், குளம், ஏரி, கிணறு வெட்டுதல், நிலத்தை உழுதல், விதையிடுதல், அறுவடை செய்தல் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்ற நாள்.
🌾 வியாழக்கிழமை : விவசாயம் சம்பந்தப்பட்ட பணிகள் செய்ய ஏற்ற தினம்.
🌾 வெள்ளிக்கிழமை : நிலத்தினை உழுதல், உரமிடல் இவற்றைச் செய்ய ஏற்ற நாள் இது.
🌾 சனிக்கிழமை : எள், பருத்தி ஆகியவற்றை விதைத்தால் அவை நல்லமுறையில் வளர்ந்து மிகுதியான விளைச்சலை தரும்.
ஏற்ற நட்சத்திரங்கள் :
🌾 அஸ்வினி : தானியம் வாங்கலாம்.
🌾 பரணி : தானியம் சேமிப்பு சிறந்தது. மாடு போன்ற விலங்குகள் வாங்க சிறந்த நாள்.
🌾 மிருகசீரிடம் : விவசாய வேலை அனைத்தும் செய்ய ஏற்ற நாள்.
🌾 திருவாதிரை : தானியத்தை களஞ்சியத்தில் சேர்க்க உத்தமமான நாள்.
பரிகாரம் :
🌱 வராஹி தேவியின் ரூப த்யான ஸ்லோகம், அம்பிகையின் கரங்களில் விவசாயத்திற்கு ஏற்ற ஏர்க் கருவியும், உலக்கையும் கொண்டு அருள்வதாகக் கூறுகின்றது. தஞ்சாவு+ர் பெரிய கோயிலில் வராஹி தேவிக்கு ஆஷாட நவராத்திரி விவசாய வளமைக்காக கொண்டாடப்படுகின்றது.
🌱 விவசாயம் சம்பந்தமான தொழில்களில் லாபம் பெருக அருள்புரிபவள். வீடு, நிலம் சம்பந்தமான விஷயங்களில் வெற்றிகளை அருளுபவள். இல்லம் எனும் வீட்டில் என்றும் தானியங்கள் நிறைந்திருக்கச் செய்பவள். மிக விரைவில் பலன் அளிக்கக் கூடியவள்.
🌱 ஆஷாட நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும், ஸப்த மாதா தெய்வங்களையும், அஷ்ட மாத்ருகா தெய்வங்களையும், வழிபாடு செய்வதும், எட்டாம் நாளில் வராஹி தேவியைப் போற்றுவதும் வளமான விவசாயத்தை நல்கும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment