இருதார திருமணம் யாருக்கு அமையும்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB இரு தார திருமணம் யாருக்கு அமையும்..?  👥 திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர். இல்லறத்தின் இனிய வரம். ஆனால் இது எல்லோருக்கும் இனிமையாக அமைவதில்லை. 👥 பொதுவாக ஜாதக நிலையில் குடும்பஸ்தானமும், களத்திரஸ்தானமும் முக்கிய நிலைகளாகும். இவற்றுடன் அமையும் கிரக சேர்க்கையினால் குடும்பத்தில் பல குழப்பங்கள் நடைபெறுகிறது. 👥 உறவுகளில் இனிய பந்தமான இல்லற வாழ்க்கையில் எந்த ராசிக்காரர்களுக்கு இரண்டு திருமணம் அமையும் என்பதை பற்றி பார்ப்போம். இரண்டு திருமணம் அமையும் ராசி எது? 👥 பொதுவாக துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இரு தாரப்பலன் அமையும் நிலையிருக்கும். இதற்கான காரணம் சந்திர சுக்கிர சேர்க்கை ஆகும். 👥 துலாம் ராசிக்கு அடுத்த ராசியாக விருச்சிக ராசியிலேயே சந்திரன் நீச்சம் பெறுகின்ற நிலையும், துலா ராசிக்கு சுகபோகஸ்தானமான கன்னி ராசியில் சுக்கிரன் நீச்சம் பெறுவதும் இரண்டு மனைவிகள் அமையும் நிலை ஏற்படுகிறது. 👥 மேலும் சித்திரை, சுவாதி, விசாகம் ஆகிய நட்சத்திரங்களின் அதிபதி கிரகமான செவ்வாய், ராகு, குரு ஆகிய கிரகச் சேர்க்கை இதற்கு காரணமாகிறது. 👥 எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு இரண்டு மனைவிகள் அமையும் பலன் எனும் நிலை அமைகிறது. 👥 ஆனால் இது எல்லோருக்கும் அமையாது. குடும்ப களத்திர நிலை கிரகங்களின் சேர்க்கையும் இதற்கு முக்கிய காரணமாக இருந்தால் மட்டுமே இரண்டு தாரப் பலன்கள் அமையும். இரண்டு திருமணம் அமையும் ராசிக்காரரின் ஜாதக நிலை எப்படி இருக்கும்? 👥 ஒருவரின் ஜாதகத்தில் களத்திர ஸ்தானமான 7ஆம் இடத்தில் சு+ரியன், சனி, செவ்வாய், சுக்கிரன் போன்ற கிரகங்களின் நிலை அமைவதும், நீச்ச நிலை பெறுவதும் இரண்டு தாரப் பலனைக் கொடுக்கும். 👥 அதேபோல சு+ரியன், செவ்வாய் சேர்க்கை, சுக்கிரன், குரு சேர்க்கை என்று ஜாதகத்தில் அமையும் நிலையும் கூட இரண்டு தாரப் பலனை கொடுக்கும். 👥 ஜாதகத்தில் கேது, ராகு, சனி, சுக்கிரன், சு+ரியன், செவ்வாய் போன்ற கிரகங்களின் தொடர்புடைய ஒரு சில நட்சத்திரங்கள் இரண்டு தாரப் பலன் பெறுகின்ற நிலை அதிகம் உள்ளது. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment