நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை !  🌟 நீங்கள் பிறந்த ஒவ்வொரு நட்சத்திற்கும் ஒவ்வொரு அதிதேவதை உண்டு. நட்சத்திரக்காரர்கள் அவர்களுக்குரிய அதிதேவதையை வழிபடுவதன் மூலம் தீய சக்திகளிடமிருந்தும், உங்கள் துன்பங்களிலிருந்தும் காப்பாற்றும் வல்லமை படைத்தது. நட்சத்திர தலங்கள் : 🌟 27 நட்சத்திரங்களில், அவரவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று நட்சத்திர தலங்களுக்கு சென்று, அவரவர்க்குரிய நட்சத்திர தல தெய்வங்களை வணங்கினால் வேண்டிய பலன் கிடைக்கும். 🌟 நீங்கள் பரிகார தலங்களுக்கு கொண்டு செல்லும் நைவேத்யங்களை தக்க விதத்தில் நிவேதனம் செய்து கடவுளின் அருளை பெறலாம். 🌟 தாங்கள் கொண்டு செல்லும் நிவேதனங்களை நீங்களும், உங்கள் குடும்பத்தாரும் சாப்பிட்டுக் கொள்ளலாம். நட்சத்திர தலங்களுக்கு செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டியவை : 🌟 ஆலயங்களுக்கு செல்லும்போது முடிந்தவரை இறை சிந்தனையோடு செல்ல வேண்டும். வீண் பேச்சுகளையும், தேவையற்ற விவாதங்களையும் தவிர்க்க வேண்டும். 🌟 இறைவன் திருவுருவங்களை தொட்டு வணங்கக் கூடாது. இரு கை கூப்பி தான் வணங்க வேண்டும். 🌟 கொடி மரத்தின் கீழ் விழுந்து வணங்க வேண்டும். கோவிலின் உள்ளே விழுந்து வணங்க கூடாது. 🌟 தரிசனம் செய்யும் போது அவசரம் கூடாது. 🌟 விபு+தி, குங்குமம் போன்ற அத்தியாவசிய பொருட்களை கோவிலுக்கு வாங்கி கொடுக்கலாம். 🌟 கோவிலை சுத்தத்துடன் வைத்துக் கொள்ள வேண்டும். குப்பைகள் ஏதாவது கோவிலில் இருந்தால் அதை சுத்தப்படுத்துவதன் மூலம் புண்ணியங்களை பெறலாம். 🌟 கோவில் அர்ச்சகரிடம் உங்களது பிரச்சனைகளை எடுத்துக் கூறி அர்ச்சனை செய்ய வேண்டும். 🌟 கோவில் பிரகாரங்களை சுற்றி வரும்போது மனஅமைதியுடன் சுற்றி வர வேண்டும். உடன் வருபவர்களிடம் பேசிக் கொண்டு செல்லுதல் கூடாது. 🌟 கோவில்களுக்கு சென்று வழிபடும்போது, தங்களது ராசியையும் கூறி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். 🌟 உங்களது ராசிக்குரிய விருட்சத்தை(மரத்தை) உங்கள் வீட்டு தோட்டத்திலோ அல்லது கோவிலிலோ வைத்து வணங்கி வருவதன் மூலம் துன்பங்கள் நீங்கும். 🌟 அவரவர் பிறந்த நட்சத்திரங்கள் அன்று அவரவர் நட்சத்திர தலங்களுக்கு சென்று வணங்கினால் வாழ்வில் சகல நன்மைகளையும் பெற்று சிறப்புடன் வாழலாம். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment