ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
உங்களுடைய விதி ரேகை என்ன சொல்கிறது ?
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
உங்களுடைய விதி எப்படி இருக்கு....!

ஒரு மனிதனின் ராசியை வைத்து அவன் வாழ்க்கை, குணாதிசயங்கள், அதிர்ஷ்டம் போன்றவற்றைக் கணிப்பது போல அவனுடைய ரேகையை வைத்தும் கூறப்படுகிறது.
உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச் செல்லும். இதுவே விதி ரேகை (அ) தொழில் ரேகை என்று அழைக்கப்படும்.
இந்த ரேகை நமது உழைப்பிற்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது எனலாம். விதி ரேகை ஒவ்வொருவருக்கும் ஒருவிதமாக இருக்கும் அதை பற்றிப் பார்ப்போம்.

👉 விதி ரேகை தௌpவாக அமைந்து வெட்டுக்குறி ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்ல அமைப்பாகும்.
👉 விதி ரேகை நடுவிரலின் கீழிலிருந்து ஆரம்பமானால் அவர்கள் எல்லா விஷயங்களிலும் சுதந்திரமாக இருப்பார்கள். உறுதியாக செயல்படுவார்கள்.
👉 உயிர் ரேகை வளைவிலிருந்து விதி ரேகை தொடங்கினால் குடும்ப மரபுகளை சரியாக பின்பற்றுபவர்களாக இருப்பார்கள்.
👉 விதி ரேகை ஆயுள் ரேகையிலிருந்து தொடங்கினால் வாழ்க்கை பாதையை அவர்களே முடிவெடுத்துக் கொள்வார்கள்.
👉 விதி ரேகையின் நடுவில் விட்டு விட்டு இருந்தால் வேலையை அடிக்கடி இழப்பவர்களாக இருப்பார்கள்.
👉 விதி ரேகை ஆரம்பத்தில் மீன் ரேகை இருந்தால் அவர்கள் ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்களாக இருப்பார்கள்.
👉 நடுவிரலின் கீழ் பக்கத்தில் விதி ரேகை முடிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்பார்கள்.
👉 இரு ரேகைகள் மேலிருந்து கீழே பிரிந்தால் அவர்கள் நன்றாக சம்பாதிப்பார்கள்.
👉 ஒருவருக்கு ஓரே மாதிரியான கைரேகைகள் இருந்தால் வாழ்க்கையில் இதை தான் நாம் சாதிக்க வேண்டும் என்ற நோக்கம் இருக்கும். சுய கட்டுப்பாடுடன் இருப்பார்கள்.
👉 கையின் கீழிலிருந்து ரேகை ஆரம்பித்து விளிம்பு பகுதியில் முடிந்தால் வாழ்க்கையின் சுய தேவைகளை அவர்களே பு+ர்த்தி செய்து கொள்வார்கள்.
👉 கைரேகையானது கிளைகளாக பிரிந்து சென்றால் இரண்டு விதமான வாழ்க்கை நிலைமை அமையும். ஒரு செயலில் எவ்வளவு போராட்டம், பிரச்சனை வந்தாலும் கடைசியில் அவர்கள் வெல்வார்கள் அல்லது வெற்றி பெற்றவர்களை அவர்கள் சந்தித்த பின் அவர்களின் வெற்றி அமையும்.
👉 கை மணிக்கட்டிலிருந்து ரேகை ஆரம்பித்தால் பணம் புழங்கும், பொருளாதார ரீதியில் நன்றாக இருப்பார்கள்.
👉 சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், அதற்குத் தகுந்த பலன் கிடைக்காது.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment