ஆன்மீக தகவல்கள். ஜோதிட ரீதியாக செய்திகள். இயற்கை முறையில் மருத்துவ குறிப்புகள். தற்போது செய்தி . Today news . சமையல் குறிப்புகள்.
செய்து வரும் பணியில் திடீரென சலிப்பு ஏற்படுவது ஏன் ?
நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB
செய்துவரும் பணியில் திடீரென சலிப்பு ஏற்படுவது ஏன்?

பணியைத் தொடங்கிய ஆரம்ப ஆண்டுகள் அல்லது சில குறிப்பிட்ட காலங்கள் வரை, அப்பணியில் கடினமாக உழைப்பீர்கள் மற்றும் அதில் அதிக ஆர்வம் இருக்கும். ஆனால், நெடுங்காலத்திற்கு அந்த மனநிலையில் இருக்க முடியாது. பணியில் சலிப்பு ஏற்பட என்ன காரணங்கள் எனப் பார்ப்போம்.
👉 சந்திரனும் புதனும் தான் நாம் செய்துவரும் பணியில் திடீரென சலிப்பு ஏற்படுவதற்கு காரணமானவர்கள். ஏனெனில் இவர்கள் இருவரும்தான் நமது அன்றாட பணிகளை சிறப்பாக செய்ய உதவி செய்கிறார்கள்.
👉 புதன் கிரகமானது பணியில் உற்சாகத்தையும், புதுமையையும் புகுத்தக் கூடியது. அப்படியான பணிக்கு நமது மனதையும், உடலையும் தயார்படுத்துவது சந்திரன்.
👉 இந்த இரண்டு கிரகங்களும் ஒருவருடைய ஜாதகத்தில் பலவீனமாக இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி சோர்வும், சலிப்பும் ஏற்படும். இது வேலை மாறுதல் போன்றவற்றைக் கூட ஏற்படுத்தக் கூடும்.
👉 ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் வலிமையாக இருந்துவிட்டால் தொடர்ந்து அந்தப் பணியை நீண்ட காலமாகச் செய்வார்கள்.
👉 சந்திரன் உச்சமாக இருப்பவர்கள் ஏதாவது ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் வெவ்வேறு நிலைகளை அடைவார்கள். இவர்களுக்கு குறிக்கோளும் உருவாக்கமும் ஒன்றாகவே இருக்கும்.
👉 எந்த பணியைத் தொடங்குகிறார்களோ அதே பணியில் உச்சத்தை எட்டுவார்கள். இது சந்திரனின் பலம்தான். இதில் புதனும் வலுவடையும்போது சலிப்பும் சோர்வும் இருக்காது.
👉 இந்த இரண்டு கிரகங்களும் ஜாதகத்தில் வலுவிழக்கும்போதோ அல்லது இந்த இரண்டு கிரகங்களுக்கு எதிரான கிரகங்களின் பார்வைக்குள் வரும்போதோ அவர்களுக்கு சோர்வும் சலிப்பும் தானாகவே வரும்.
👉 அப்போதுதான், வேறு வேலைக்கு மாறினால் என்ன? வேறு ஏதாவது முயற்சியில்
👉 ஏனெனில், இந்த இரண்டு கிரகங்களையும் தாண்டிய ஒரு யோக திசை வரும்போது, இப்போதுள்ள பாதையில் இருந்து புதிய பாதைக்கு மாறி செழிப்பான ஒரு நிலைக்கு கொண்டு செல்லலாம். ஆனால் இதனை ஒரு உறுதியான அறிகுறியாகக் கொள்ள முடியாது.
பரிகாரம் :
🌿 மாதத்தில் முதல் சனிக்கிழமை நவக்கிரக சன்னதிக்கு சென்று, மூன்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக ஐந்து மாதங்கள் வழிபட வேண்டும்.
🌿 திருச்சி லால்குடி அருகே உள்ள நகர் ஸ்ரீஅப்பிரதட்சிணேஸ்வரர் சிவாலயத்தில் உள்ள வில்வமரத்திற்கு மாத பிறப்பு தினங்களில் அரைத்த மஞ்சளை மரத்திற்கு பு+சி வணங்கி வலம் வர வேண்டும்.
🌿 குலதெய்வ கோவிலுக்கு சென்று வணங்கி வரவேண்டும். குலதெய்வத்திற்கு ஏதாவது குறைகள் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வேண்டும். இவைகளை முறைப்படி செய்தால் நிலைத்த உத்தியோகமும், நிலைத்த தொழிலும் அமையும்.
🌿 அனுமன் மற்றும் பைரவரை வழிபட்டு வந்தால் நன்று. அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்தும், பைரவருக்கு 27 மிளகுகளை வெள்ளை துணியில் முடிந்து நல்லெண்ணெய் விட்டு விளக்கேற்றி வரலாம்.
🌿 தினசரி காலையில் சு+ரியன் உதிக்கும் திசை பார்த்து எழ வேண்டும். பின்பு காலையில் எழுந்து குளித்தவுடன் சு+ரிய பகவானை வழிபட்டு வரவேண்டும்.
இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment