எநத நட்சத்திரத்தில் என்ன சுபகாரியம் செய்யலாம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB எந்த நட்சத்திர நாளில் என்ன சுபகாரியம் செய்யலாம்?  ⭐ எந்த காரியமாக இருந்தாலும் குறிப்பாக நல்ல காரியமாக இருந்தால் அது நல்ல விதமாக முடிய வேண்டும் என்று நல்ல நேரம், காலம் பார்க்கிறோம். கல்வி கற்க, சுப முகூர்த்தம் செய்ய, வாசக்கால் வைக்க, சீமந்தம் செய்ய போன்ற பலவிதமான நிகழ்ச்சிகளுக்கு நாம் நாள், நட்சத்திரம் பார்க்கிறோம். எந்த நட்சத்திர நாளில் என்ன சுபகாரியம் செய்யலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுவன பற்றி தெரிந்துக் கொள்வோம். ⭐ சுப காரியங்களை செய்வதற்கேற்ப நட்சத்திரங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. ⭐ ஊர்த்துவ நட்சத்திரங்கள் ⭐ அதோமுக நட்சத்திரங்கள் ⭐ திருயக்முக நட்சத்திரங்கள் ஊர்த்துவ நட்சத்திரங்கள் : ⭐ ரோகிணி, திருவாதிரை, பு+சம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்கள் ஊர்த்துவ நட்சத்திரங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரம் நடைபெறும் நாட்கள் மேல்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. என்ன செய்யலாம் : ⭐ மேல்மாடம், மதிற்சுவர் கட்டலாம் ⭐ கொடிமரம் வைக்கலாம் ⭐ கொட்டகை, பந்தல் போடலாம் ⭐ வாசற்படி கட்டுவது நன்று. அதோமுக நட்சத்திரங்கள் : ⭐ பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பு+ரம், விசாகம், மூலம், பு+ராடம், பு+ரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் அதோமுக நட்சத்திரங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. என்ன செய்யலாம் : ⭐ கிணறு, குளம் வெட்டலாம் ⭐ புதையல் தேடலாம் ⭐ களஞ்சியம், வேலி போன்றவற்றை அமைக்கலாம் ⭐ கணிதம் பயிலலாம் ⭐ கிரகப்பிரவேசம் செய்வது நன்மையைத் தரும். திரியக்முக நட்சத்திரங்கள் : ⭐ அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பு+சம், அஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் திரியக்முக நட்சத்திரங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. இந்த நட்சத்திரங்கள் நடைபெறும் நாட்கள் சமநோக்கு நாட்கள் என்று குறிப்பிடப்படுகின்றன. என்ன செய்யலாம் : ⭐ பிராணிகளை வாங்கலாம் ⭐ விவசாயம் செய்ய தொடங்குவது நன்மையான பலன்களை தரும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment