கண்களின் நிறமும் குணமும் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB கண்களின் நிறத்தை வைத்து குணத்தை அறியலாம்.!!  ✴ மனித உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கண்கள். ஒருவரின் மனநிலையை அறிய அவர்களின் கண்களை வைத்து எளிதாக தெரிந்து கொள்ளலாம். நம் கண்களின் மூலமாகவே அன்பு, பாசம், கவனிப்பு, காதல், அலட்சியம், வெறுப்பு என பல விதமான உணர்வுகளை காட்டலாம். நம்முடைய தனித்துவம் மற்றும் பிரத்தியேக குணத்தை காண நம் கண்களின் நிறம் நமக்கு உதவுகிறது. கண்களின் நிறத்தை வைத்து அவர்களின் பொதுவான குணங்களை பற்றி காண்போம். கருப்பு நிற கண்கள் : ✴ கருப்பு நிற கண்கள் உள்ளவர்கள் ரகசியமிக்கவர்களாகவும், எளிதில் உணர்ச்சி வசப்படுபவர்களாகவும் இருப்பார்கள். எளிதாக யாரையும் நம்பிவிட மாட்டார்கள். ஆனால் நண்பராகி விட்டால், அவர்களை கண்டிப்பாக நம்பலாம். பொறுமை இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நேர்மறையான நம்பிக்கை அதிகளவில் இருக்கும். தங்க நிற கண்கள் : ✴ தங்க நிறக் கண்களை கொண்டவர்கள் யாருடனும் ஒன்றாமல் இருப்பார்கள். அழகுடையவர்களாகவும், அன்புடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். தனித்துவமான குணங்களை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் தன்னிச்சையாக இருப்பதால் இவர்களுடன் இருப்பது கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கும். பழுப்பு நிற (பிரவுன்) கண்கள் : ✴ பலருக்கும் உள்ள பொதுவான கண்களின் நிறம் பழுப்பு நிறமாகும். பழுப்பு நிற கண்கள் கொண்டவர்கள் நல்ல குணத்துடன் பாசமிக்கவராக இருப்பார்கள். அனைவரையும் ஈர்க்கும் தன்மை உள்ளவர்களாக இருப்பார்கள். இவர்களுடன் இருப்பது மிகவும் சந்தோஷத்தை அளிக்கும். நடக்க போவதை எண்ணி அவர்கள் மிகவும் அரிதாகவே கவலை கொள்வார்கள். அதே மாதிரி நண்பர்கள் அமைத்துக் கொள்வதிலும் அவர்கள் கில்லாடி ஆவார்கள். நீல நிற கண்கள்: ✴ உலகத்தில் பலருக்கும் பிடித்த கண்களின் நிறம் என்றால் அது நீல நிறம் என்று கூறலாம். பொதுவாகவே நீல நிற கண்களை கொண்டவர்கள் அழகாகவும், அன்பாகவும், அறிவாளியாகவும் இருப்பார்கள். கூர்ந்து கவனிக்கும் ஆற்றல்களுக்கும், பிறருக்கு தேவைப்படும் போது கைக்கொடுப்பதிலும் இவர்கள் வல்லவர்கள் ஆவர். கண்களின் நிறம் அவ்வளவு அழகாக இருப்பதால், பார்ப்பதற்கும் வசீகரத்துடன் இருப்பார்கள். நல்ல நட்புடன் பழகுவார்கள். சாம்பல் நிற கண்கள் : ✴ சாம்பல் நிற கண்களை கொண்டவர்கள் அமைதியானவர்களாகவும், புத்திசாலித்தனமாகவும் மற்றும் ஒழுக்கத்துடனும் இருப்பார்கள். நம்பிக்கைக்கு பாத்திரமானவர்களாக விளங்குவார்கள். சாம்பல் நிற கண்களை கொண்டவர்கள் அவர்களின் உட்புற வலிமை, பகுத்தறிவு சிந்தனை போன்றவற்றை அதிகமாக பேசுவார்கள். அவர்கள் மிகப்பெரிய தலைவர்களாக இருப்பார்கள். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment