வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகம்

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB செல்வந்தராக, வெற்றி மேல் வெற்றி பெறும் ஜாதகர் யார்..?  ஒருவருடைய ஜாதகத்தில் குருவும், சுக்கிரனும் கெட்டால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவது கடினமாக இருக்கும். சுக்கிரன் வசதி வாய்ப்புகளுக்கு அதிபதி என்றால் குரு செல்வாக்குக்கு, கௌரவத்துக்கு, குழந்தை பாக்யத்துக்கு அதிபதி. இவை இரண்டுமே நம்முடைய வாழ்க்கையை முழுமை செய்யகூடியவை. 🌟 அதற்கு அடுத்தபடியாக செவ்வாயும், சனியும் உங்களுக்கு சக்தி கொடுப்பவர்கள். எனர்ஜி இல்லாவிட்டால் சோம்பலும், சலிப்பும் வந்துவிடும். அதிகமாக உழைக்க முடியாது. 🌟 அடுத்த கட்டமாக திறமை இருந்தால்தானே எல்லாவற்றையும் உருவாக்க முடியும். அதை தருபவர்கள் புதன் மற்றும் சந்திரன். 🌟 எதையும் துணிந்து செய்யவேண்டும் எனில் நல்ல நிர்வாகதிறன் வேண்டுமெனில் சு+ரியன், ராகு, செவ்வாய் துணை வேண்டும். 🌟 வாழ்க்கையில் இனி என்ன செய்யப்போகிறோம். மற்றவருக்காக என்ன செய்யப்போகிறோம் என்ற கேள்வி ஞானத்தையும், நல்லது கெட்டதையும் நமக்கு உணர்த்துபவர்கள் கேது மற்றும் குரு பகவான் ஆவார்கள். 🌟 தாய், தந்தை வழிகாட்டல் இல்லா குழந்தை நிலைதான் ஜாதகத்தில் சு+ரியன், சந்திரன் இரண்டு ஒளி கிரகங்கள் கெட்டு விட்டால், வாழ்க்கை இருள் நிறைந்து காணப்படும். சு+ரியன் நிர்வகிக்கும் தன்மையை சிதைத்து விடுகிறார். சந்திரன் மனதை கெடுத்து, மனம் போன போக்கில் வாழும் நிலையை உண்டாக்குகிறார். 🌟 ஒருவடைய ஜாதகம் எப்படி இருந்தாலும் யோகமான கிரகத்தின் நட்சத்திரத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தால் அந்த ஜாதகருக்கு வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். 🌟 ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி, பிறந்த நட்சத்திர அதிபதி, பிறந்த ராசி அதிபதி, பிறந்த கிழமை அதிபதி கெடாமல் இருந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி பெறலாம். ஜாதகத்தில் பல யோகங்கள் இருப்பினும் அதன் திசை புத்தி வந்தால்தான் அதை அனுபவிக்க முடியும். 🌟 பு+சம், அனுஷம், உத்திரட்டாதி போன்ற சனியின் நட்சத்திரங்கள் அனைத்தும் சுபகாரியம் செய்ய மிகவும் உகந்தவை. எந்த காரியமும் செய்தாலும் நிலையான நீடித்த பலன்களை கொடுக்கும். அதிர்ஷ்டம் உண்டாக்கும் பரிகாரங்கள் : கபிஸ்தலம் : 🌙 கபிஸ்தலம் எனப்படும் கஜேந்திர வரதராஜ பெருமாள் கோவில் தஞ்சை மாவட்டம் திருவையாறு-கும்பகோணம் சாலையில் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. 🌙 வாழ்க்கையில் தொடர்ந்து வறுமையில் இருப்பவர்கள், தொழிலில் லாபம் பெற முடியாதவர்கள், நோயால் அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள் இத்தலத்து கண்ணனை வழிபட நினைத்தது நடைபெறும். வாழ்வில் கஷ்டங்கள் நிவர்த்தியாகும். 🌙 இத்தலத்தில் ஒருநாள் முழுவதும் தங்கி இருந்து அர்ச்சனை, ஆராதனை செய்து வழிபட்டால் நம் கஷ்டங்கள் நீக்கும். மூன்றாம் பிறை : 🌙 கை, கால் முகம் கழுவிவிட்டு, கையில் ஒரு மலர், ஒரு ரூபாய் காயின் எடுத்துக்கொண்டு வந்து மூன்றாம் பிறையை பார்த்து குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வணங்கி உங்கள் மனதில் நினைத்தை வேண்டிக்கொண்டு, பு+ஜையறையில் தீபமேற்றி அந்த மலரை வைத்து வணங்கி வர நினைத்தது விரைவில் நடைபெறும். இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment