குரு . சுக்கிரன் எதிர் எதிர் நின்றால் என்ன நடக்கும் !

நித்ரா தமிழ் நாட்காட்டி வழியாக பகிரப்பட்டது. செயலியை தரவிறக்கம் செய்ய https://goo.gl/mEdkOB குரு, சுக்கிரன் எதிர் எதிர் துருவங்கள் சேர்ந்தால், என்ன நடக்கும்?  குருப் பெயர்ச்சி நடந்து முடிந்த நிலையில் குருவின் அருளைப் பெறவேண்டி, பலரும் பரிகாரங்களை செய்து வருகிறார்கள். நவகிரகங்களில் குரு, சுக்கிரன் ஆகிய இரண்டு கிரகங்களுமே மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். இப்படி எதிரெதிர் துருவமாக இருக்கும் இவர்கள் ஒருவருடைய ஜாதகத்தில் தங்களின் பார்வை மற்றும் சேர்க்கையின் வழியாக என்னவிதமான பாதிப்பை உருவாக்குவார் என பார்ப்போம். குரு, சுக்கிரன் பார்வைகள்... பலன்கள்... இந்த இரண்டு கிரகங்கள் பகையாக இருந்தாலும், இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்துக்கொண்டால் உண்டாகும் பலன்களைப் பார்ப்போம். 👉 குரு, ஆட்சி (தனுசு, மீனம்), நட்பு (மேஷம், விருச்சிகம்), சமம் (சிம்மம், கும்பம்) ஆகிய ராசிகளில் நின்று 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், சுக்கிரன் பகை, நீசம் நிலையை அடைந்து இருந்தாலும், சுக்கிரன் தனக்குரிய சுப பலனைத் தருவதில் குறை வைப்பதில்லை. 👉 குரு, பகை ராசிகளான (ரிஷபம், துலாம், மிதுனம்) நின்று 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால், அரை பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார் 👉 குரு சமமான ராசியில் (கும்பம்) நின்று, 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால் சுக்கிரன் முக்கால் பங்கு சுப பலனைத் தருவார். 👉 குரு நீச ராசியான மகரத்தில் நின்று 5, 9-ம் பார்வையாக சுக்கிரனைப் பார்த்தால் கால் பங்கு மட்டுமே சுக்கிரன் சுப பலனைத் தருகிறார். இதில் சுக்கிரன் ஆட்சி, நட்பு ராசியில் இருந்தால் சுக்கிரனே முழு சுப பலனையும் தந்து விடுவார். 👉 இருவரும் 7- ம் பார்வையாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டால் இருவரும் எந்த ராசியில், எந்த நிலையில் இருந்தாலும், முழுமையான சுபயோக பலனையே தருகிறார்கள். குரு சுக்கிரன் சேர்க்கையின் பலன்கள்! 👉 குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திர ஸ்தானமான 1, 4, 7 மற்றும் 10 ஆகிய இடங்களில் நின்று இருந்தால், சுப பலனை தருகிறார். 👉 குருவும் சுக்கிரனும் 5, 9, 11-ம் இடங்களில் நின்று இருந்தால் அவரவர் உரிய சுப பலனைத் தருவார்கள். 👉 குரு, சுக்கிரன் இணைந்து 3, 6, 8 மற்றும் 12 ஆகிய இடங்களான மறைவு ஸ்தானங்களில் நின்று இருந்தால், கால் பங்கு மட்டுமே சுப பலனைத் தருகிறார்கள். இதிலும் பகை, நீசம் என்ற நிலையில் இருந்தால் பெரிய அளவில் யோகம் செய்வது இல்லை. இலவச நாட்காட்டியை. கீழுள்ள லிங்கை கிளிக் செய்து இந்த இலவச ஆன்டிராய்டு அப்ளிகேசனை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்! https://goo.gl/mEdkOB

No comments:

Post a Comment